Home
Apps

பெற்றோருக்கான சிறந்த 10 வாட்ஸ்அப் உளவு பார்ப்பு சாஃப்ட்வேர்கள்.!

உங்கள் குழந்தையின் அனுபவம் இல்லாத தன்மை மற்றும் குறைந்த உலக அறிவு ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு செயல்படும் பல்வேறு அபாயகரமான காரியங்கள்.

By Jijo Gilbert

தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சியின் மூலம் தகவல் தொடர்பிற்கு ஏராளமான வழிகளின் தோன்றலுக்கு வழிவகுத்து உள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி, மேம்பாட்டிற்கு எந்த வகையிலும் எல்லை விதிக்கவில்லை. இதனால் பல அபாயங்களும் அச்சுறுத்தல்களும் அதிகரித்து உள்ளன. இந்த நிலையில் இது போன்ற ஒன்று வயது குறைந்த நுகர்வோர் உடன் ஒன்று சேரும் போது, கைகளில் ஒரு அபாயகரமான இணைப்பாக கிடைத்து விடுகிறது.

பெற்றோருக்கான சிறந்த 10 வாட்ஸ்அப் உளவு பார்ப்பு சாஃப்ட்வேர்கள்.!

உங்கள் குழந்தையின் அனுபவம் இல்லாத தன்மை மற்றும் குறைந்த உலக அறிவு ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு செயல்படும் பல்வேறு அபாயகரமான காரியங்கள், இணையதளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அதே நேரத்தில், உங்கள் குழந்தையின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்டறிய கூடிய ஏராளமான அப்ளிகேஷன்கள் மற்றும் சாஃப்ட்வேர்கள் உள்ளதால், இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. இதில் ஒரு சில முக்கியமான அப்ளிகேஷன்களைக் குறித்து கீழே காண்போம்.

ஐஓஎஸ்-க்கான உளவு சாஃப்ட்வேர்:

ஐஓஎஸ்-க்கான உளவு சாஃப்ட்வேர்:

வாட்ஸ்அப்பில் உங்கள் குழந்தையின் செயல்பாட்டை குறித்து கண்காணிக்க உதவும் சில முக்கிய அப்ளிகேஷன்கள் அடங்கிய ஒரு பட்டியல்

ஆண்ட்ராய்டு சந்தையில் காணப்படுகிறது. அது கீழே அளிக்கப்பட்டுள்ளது.

ஐஓஎஸ்-க்கான ஸ்பைஸ்சி வாட்ஸ்அப் ஸ்பை

விலை: $ 39.99/ மாதம்
இதில் வாட்ஸ்அப் செயல்பாட்டை கண்காணிப்பது மட்டுமின்றி, இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி எஸ்எம்எஸ், போட்டோ, ஜிபிஎஸ் மற்றும் அழைப்பு வரலாறு ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.

போஸ்ப்பி

போஸ்ப்பி

விலை: இலவசம்

இந்த அப்ளிகேஷனில் பல்வேறு அம்சங்கள் இல்லாவிட்டாலும், வாட்ஸ்அப் செய்திகள், சாதனம் இருக்குமிடம், அழைப்பு வரலாறு மற்றும் உங்கள் குழந்தையின் சாதனத்தில் இருந்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மின்னஞ்சல்கள் ஆகியவற்றை கண்காணிக்க கூடிய திறன் கொண்ட சில அம்சங்களைப் பெற்று உள்ளது.

ஈஸி ஃபோன் டிராக்

ஈஸி ஃபோன் டிராக்

விலை: $120

உங்கள் குழந்தை இருக்கும் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும் என்பதோடு, அவர்களின் பேஸ்புக், ஸ்கைப், ஹேங்அவுட் மற்றும் மற்ற சமூக தளங்களில் உள்ள செயல்பாடு ஆகியவற்றை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

மொபைல் ஸ்பை

மொபைல் ஸ்பை

விலை: $49.97

உங்கள் குழந்தையின் வாட்ஸ்அப் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. மேலும் ஃபோன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், ஜிபிஎஸ் இருப்பிடம் ஆகியவற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது.

மொபிஸ்டில்த்

மொபிஸ்டில்த்

விலை: இரண்டு வாரங்களுக்கு $19.99

சிறந்த உளவு பார்க்கும் சாஃப்ட்வேர்களில் ஒன்றாக திகழும் இது, இருப்பிடம், அழைப்பு வரலாறு மற்றும் குறுஞ்செய்திகள் உள்ள பல்வேறு தகவல்களை கண்காணிக்க முடிகிறது. இந்த அப்ளிகேஷனில் அளிக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு அம்சங்கள், அதிக திறன் வாய்ந்தவை என்பதோடு, எப்போதும் மறைமுகமாகவே உள்ளது. இந்த அப்ளிகேஷனில் உள்ள ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால், இதை பயன்படுத்துவதற்கு உங்கள் சாதனத்தை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்.

 ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான உளவு பார்க்கும் சாஃப்ட்வேர்

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான உளவு பார்க்கும் சாஃப்ட்வேர்

உங்கள் குழந்தை ஆண்ட்ராய்டு பயன்படுத்தி உள்ள வாட்ஸ்அப் செயல்பாடுகளை கண்காணிக்க கூடிய சில முக்கிய அப்ளிகேஷன்களை கீழே காண்போம்:

ஆண்ட்ராய்டிற்கான ஸ்பைஸ்சி வாட்ஸ்அப் ஸ்பை

ஆண்ட்ராய்டிற்கான ஸ்பைஸ்சி வாட்ஸ்அப் ஸ்பை

விலை: $39.99/ மாதம்

இந்த அப்ளிகேஷனில், வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மற்றும் ஜிபிஎஸ் இருப்பிடம் உள்ளிட்ட சமூக இணையதள அப்ளிகேஷன்களை கண்காணிக்க கூடிய எண்ணற்ற அம்சங்களின் ஒரு கூட்டம் காணப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, ஒரு பலமான நுகர்வோர் ஆதரவு அமைப்பும் காணப்படுகிறது. ஆனால் இதில் உள்ள ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால், வாட்ஸ்அப் அழைப்புகளை பதிவு செய்ய முடியாது.

ஃபோன் மானிட்டர்

ஃபோன் மானிட்டர்

விலை: இலவசம்

இந்த அப்ளிகேஷன் இலவசமானது என்பதோடு, இதை கடந்து கூடுதலாக எந்தொரு படிகளை நாம் செய்ய வேண்டியது இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த அப்ளிகேஷனை நிறுவி விட்டு, பயன்படுத்த தொடங்கலாம். இந்த அப்ளிகேஷன் இலவசம் என்றாலும், உங்கள் சாதனத்தை இழக்க நேர்ந்தால், அதை கண்காணிப்பதற்கு $3 செலுத்த வேண்டியுள்ளது.

மொபைல் மானிட்டர்

மொபைல் மானிட்டர்

விலை: இலவசம்

இந்த அப்ளிகேஷன் மூலம் வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் எஸ்எம்எஸ்-கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என்பதோடு, இதை ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் அழைப்பு பட்டியல்கள் ஆக பயன்படுத்த முடியும்.

டாப் ஸ்பை அப்ஸ்

டாப் ஸ்பை அப்ஸ்

விலை: இலவசம்

இந்த அப்ளிகேஷன் மூலம் கண்காணிக்கப்படும் சாதனத்தை குறித்த விரிவான அறிவிப்புகளைப் பெற முடியும். மேலும் வணிகத்தில் சிறந்ததாகவும் அவ்வப்போது குறிக்கப்படுகிறது. இதன்மூலம் எஸ்எம்எஸ்-கள், தொடர்புகள், அழைப்பு வரலாறு, வாட்ஸ்அப் மற்றும் வைபர் செய்திகள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். ஆனால் தொடர்ச்சியாக அறிவிப்புகளை பெற முடியாது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 கிட்ஸ் மொபைல் மானிட்டரிங்

கிட்ஸ் மொபைல் மானிட்டரிங்

விலை: $3

இதன்மூலம் வாட்ஸ்அப், எஸ்எம்எஸ்-கள், வைபர் மற்றும் ஃபோன் அழைப்புகள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இந்த எல்லா செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு விரிவான அறிக்கையாக சேர்த்து வைத்து கொள்கிறது. அதை பதிவிறக்கம் செய்த பிறகு, கணக்கில் நீங்களே உள்நுழைந்து பெற வேண்டும். ஜிபிஎஸ் பயன்படுத்தி, சாதனத்தின் தற்போதைய இருப்பிடம் கூட நம்மால் கண்டறிய முடியும்.

Best Mobiles in India

English summary
Facebook to regulate political ads on its platform by disclosing who paid for the campaign :Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X