செல்பி புகைப்படங்களை அழகாக்க உதவும் சிறந்த 10 செயலிகள்

By Siva
|

கேமிரா இல்லாத ஸ்மார்ட்போனே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தரமான கேமிராவுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக அனைத்து நிறுவனங்களும் செல்பி கேமிராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது தெரிந்ததே

செல்பி புகைப்படங்களை அழகாக்க உதவும் சிறந்த 10 செயலிகள்

இந்த நிலையில் செல்பி கேமிராவினால் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படங்கள் அழகாக இருந்தாலும் அழகுக்கு அழகூட்ட ஒருசில செயலிகள் இணையத்தில் உள்ளன. அதில் சிறந்த பத்து செயலிகளை தற்போது பார்ப்போம்

ஸ்வீட் செல்பி (Sweet Selfie)

ஸ்வீட் செல்பி (Sweet Selfie)

உங்கள் கேமராவில் ஒரு ஃபெர்பெக்ட் செல்பியை எடுத்துவிட்டால், அதன் பின்னர் அந்த புகைப்படத்தை மேலும் மெருகூட்டவும், ஒருசில செல்பி பில்டர்களையும் கொண்டது தான் இந்த ஸ்வீட் செல்பி செயலி.

மேலும் உங்கள் செல்பி புகைப்படங்களில் எமோஜிக்களை இணைக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி வெளிச்சம் குறைவான இடத்தில் தெளிவான செல்பி எடுக்க சூப்பர் பவர் ஃபிளாஷ் இந்த செயலியில் உண்டு

கேண்டி கேமிரா (Candy camera)

கேண்டி கேமிரா (Candy camera)

இந்த செயலி செல்பி புகைப்படங்களை பில்டர் செய்யவும், அழகிய வடிவில் டிசைன் செய்யவும் உதவுகிறது. மேலும் இந்த செயலி நீங்கள் போட்டோ எடுக்கும்போதே ரியல் டைமில் பில்டர்களை காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எடிட்டிங் வசதி, ஸ்லிம்மின் வசதி, வொயிட்னிங் வசதி ஆகியவைகளுடன் லிப்ஸ்டிக், ஐ லைனர் போன்றவற்றை புகைப்படத்தில் இணைக்கவும் இந்த செயலி உதவுகிறது.

B612 செல்பிஜீனிக் கேமிரா (B612 Selfiegenic camera)

B612 செல்பிஜீனிக் கேமிரா (B612 Selfiegenic camera)

செல்பி புகைப்படங்களை மிக அழகாக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய இந்த செயலி உதவுகிறது. மேலும் இந்த செயலியால் சாதாரண செல்பி புகைப்படத்தில் ஸ்டிக்கர் மற்றும் ஏஆர் பில்டரை இணைப்பதால் உங்கள் செல்பி புகைப்படம் வேற லெவலுக்கு மாறும்.

மேலும் செல்பி புகைப்படத்தில் எக்ஸ்ட்ரா கலர் சேர்க்கவும் உதவுவதால் செல்பி பிரியர்களுக்கு இந்த செயலி ஒரு வரப்பிரசாதம் ஆகும்

யூகேம் பெர்ஃபெக்ட் (YouCam Perfect)

யூகேம் பெர்ஃபெக்ட் (YouCam Perfect)

இந்த செயலியை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தால் புகைப்படங்களில் உங்கள் போட்டோவின் கலரை மாற்றிவிடலாம். கருப்பாக இருப்பவரை வெள்ளையாக மாற்றும் பவர் இந்த செயலிக்கு உண்டு. மேலும் முக சுருக்கங்கள், தழும்புகள் ஆகியவற்றை நீக்கவும் இந்த செயலி உதவும்.

அதுமட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட படத்தொகுப்பு அம்சங்கள், பிரேம்கள், ஸ்டிக்கர்கள், மற்றும் வேடிக்கையாக மாற்றும் விஷயங்களும் இதில் உண்டு. செல்பி வீடியோக்களுக்கும் இந்த செயலி எடிட் செய்ய உதவுகிறது.

பியூட்டி பிளஸ் (Beauty Plus)

பியூட்டி பிளஸ் (Beauty Plus)

சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் இந்த செயலியில் கறைகள் நீக்கவும், மென்மையாக தோலாக மாற்றம், கண்களை கவர்ச்சியாக மாற்றவும், பற்களை தூய வெண்மையாக மாற்றவும், கண் கலரை மாற்றவும் செய்யலாம். ஏராளமான பில்டர்கள், ஸ்பெஷல் எபெக்ட்களிஅ கொண்ட இந்த செயலி நிச்சயம் செல்பி பிரியர்களுக்கு உபயோகமானதே.

மேலும் புகைப்பட தொழில் புரிபவர்களுக்கு உதவும் வகையில் கூடிய அதிநவீன போட்டோ எடிட்டிங் டூல்ஸ்கள் இதில் உள்ளன. மேலும் இந்த செயலியில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை இதிலிருந்தே சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட் ஆகியவற்றுக்கு அனுப்பலாம்

ரெட்ரிகா செல்பி, ஸ்டிக்கர், GIF

ரெட்ரிகா செல்பி, ஸ்டிக்கர், GIF

இந்த செயலி மூலம் நீங்கள் செல்பி எடுக்கும்போதே பில்டர் செய்யலாம். மேலும் மல்டிபிள் செல்பி எடுக்கவும், அவ்வாறு எடுத்த செல்பி புகைப்படங்களை உடனடியாக அழகாக மாற்றவும் முடியும். மேலும் இந்த செயலி மூலம் நீங்கள் எடுத்த செல்பி புகைப்படங்களை வீடியோவாக மாற்றவும் செய்யலாம். அதேபோல் இவற்றை சமூக வலைத்தளங்களுக்கும் ஷேர் செய்யலாம்

பெஸ்ட்மி செல்பி கேமிரா (BestMe Selfie Camera)

பெஸ்ட்மி செல்பி கேமிரா (BestMe Selfie Camera)

மற்ற செயலிகளை போலவே இந்த செயலியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பில்டர்கள், எமோஜிக்கள், ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை உங்களது செல்பி புகைப்படங்களில் இணணக்கலாம். மேலும் இந்த செயலியில் மிர்ரர் போட்டோ கேமிரா அம்சம் உண்டு. மேலும் டிரெண்டிங்கில் உள்ள எமோஜிக்கள் இதன் சிறப்பு

HD செல்பி கேமிரா

HD செல்பி கேமிரா

இந்த செயலி மூலம் செல்பி புகைப்படங்களை சீன் மோட்கள், கலர் எபெக்ட்கள், ஒயிட் பேலன்ஸ் மற்றும் பல அம்சங்களை இணைக்கலாம். மேலும் இந்த புகைப்படங்களின் மூலம் ஜிபிஎஸ் லொகேஷன்களையும் இணைக்கலாம். இந்த செயலி உங்கள் செல்பி புகைப்படங்களை HDயில் எடுக்க உதவுகிறது என்பது கூடுதல் அம்சம்

செல்பி சிட்டி (Selfie City)

செல்பி சிட்டி (Selfie City)

இந்த செயலி புரபொசனல் கேமிராமேன்களுக்கு தேவையான ஒன்று. தெளிவில்லாமல் வரிவடிவில் உள்ள, மங்கலான, புகைப்படங்களை ரீடச் செய்து அவற்றை மிக அழகாக மாற்றிவிடும்.

மேக்கப் பிளஸ்

மேக்கப் பிளஸ்

புகைப்படங்களை எடிட்டிங் செய்வதற்கு ஸ்பெஷலான செயலி இதுதான். புகைப்படத்திற்கு மிக அழகாக மேக்கப் செய்ய இந்த செயலி உதவுகிறது. குறிப்பாக லிப்ஸ்டிக், உருவத்தின் எல்லைக்கோடு, கண்மை, புருவ அழகு, முடியை அழகு செய்தல் ஆகியவற்றை செய்யலாம். மேலும் இந்த செயலியில் ஒரு வீடியோ உள்ளது. இதன் மூலம் புகைப்படங்களை எப்படி மேக்கப் செய்யலாம் என்பதை விளங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Gone are those when you try to take a good picture with a rear smartphone camera. Skip to the present, we have selfie camera and half of the phone company find its promotion solely on this term -- selfie

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X