எலோன் மஸ்க்: உங்க விளையாட்டுக்கு அளவே இல்லையா? இப்படி கூட XBOX கண்ட்ரோலர பயன்படுத்தலாமா?

போரிங் நிறுவனமான எலோன் மஸ்க் நிறுவனம் சுரங்கப்பாதை இயந்திரங்களை இயக்குவதற்கு புதிய வழிமுறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது.


போரிங் நிறுவனமான எலோன் மஸ்க் நிறுவனம் சுரங்கப்பாதை இயந்திரங்களை இயக்குவதற்கு புதிய வழிமுறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய முயற்சி பற்றிய வீடியோ ஒன்றையும் டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது அந்நிறுவனம்.

Advertisement

இந்த வீடியோவில் ராட்சஸ குகை துளை போடும் இயந்திரத்தை என்ஜினீயர் ஒருவர் தனது எக்ஸ்-பாக்ஸ் கண்ட்ரோலர் மூலம் இயக்குவது போன்று ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு "பெஸ்ட் வீடியோ கேம் எவர்(Best video game ever)" என்று பெயரிடப்பட்டு டிவிட்டர் இல் பகிரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

எக்ஸ்-பாக்ஸ் கண்ட்ரோலர்

எலோன் மஸ்க் போரிங் நிறுவனம் உண்மையில் குகைகளை தோண்டுவதற்கு எக்ஸ்-பாக்ஸ் கண்ட்ரோலர் மூலம் கட்டுப்படுத்தப்படும் போரிங் எந்திரங்களைப் பயன்படுத்த போகிறதா என்பது இன்னம் உறுதிப்படுத்தப்படவில்லை. இருபின்னும் இந்த வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டது, வெறும் வேடிக்கை பரிசோதனை முறையா என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

டிவிட்டர் வீடியோ

பில்லினியர் டெக் மோகல் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவேற்றம் செய்து பகிர்ந்துள்ளார். அதில் 'எங்கள் புதிய போரிங் இயந்திரத்தை [ எக்ஸ்-பாக்ஸ் கண்ட்ரோலர்] கொண்டு இயக்கும் சோதனை ஓட்டம். " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ்"

அண்மையில் நடந்த "ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ்" போட்காஸ்ட் நிகழ்ச்சியில் மஸ்க் தந்து போரிங் நிறுவனம் பொழுதுபோக்காக துவக்கப்பட்டது தான் என்று ஒப்புக்கொண்டார். முக்கியமாக அவரது போரிங் நிறுவனம் "ஹாபி கம்பெனி" என்று குறிப்பிட்டார்.

ராட்சஸ போரிங் எந்திரங்கள்

2016 இல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் குறைந்த காலத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ராட்சஸ போரிங் எந்திரங்களைப் பயன்படுத்தியது. வரும் காலத்தில் பால்டிமோர் மற்றும் சிகாகோ போன்ற பிற நகரங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய சுரங்கப்பாதைகளை தோண்டுவதற்குப் பெரிய துளை இயந்திரங்களைப் பயன்படுத்தும் என்றும் மஸ்க் தெரிவித்தார்.

ஹாபி நிறுவனம் / போரிங் நிறுவனம்

"நான் முன்பு சொன்னது போல இது ஒரு ஹாபி நிறுவனம் ஆனால் "போரிங்(Boring-சலிப்பு)" நிறுவனம் என்று பெயரிடப்பட்டு விட்ட ஹாபி நிறுவனமான போரிங் நிறுவனம்" என்று ஒரு நகைச்சுவையுடன் தனது உரையாடலைத் துவங்கினார் மஸ்க்.

வெற்றி நிச்சயம்

நான் 16 ஆண்டுகளாக எல்.ஏ இல் வாழ்ந்து வருகிறேன், ஆனால் இதுவரை போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. அதனால் போக்குவரத்து நெரிசலை மேம்படுத்துவதற்கு இந்த சுரங்கப்பாதை முறையை நங்கள் முயற்சித்து பக்க விரும்பினோம். இந்தத் திட்டம் நிச்சயம் வெற்றி அடையும் என்று நான் சொல்லவில்லை வெற்றி அடைந்தாள் நிச்சயம் அனைவர்க்கும் நல்லது என்று கூறினார்.

முதல் சுரங்கப்பாதை

எலோன் மாஸ்க் நிறுவனத்தின் முதல் சுரங்கப்பாதை கலிபோர்னியாவின் ஹாவ்தோர்ன் நகரத்தில் இல் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்தில் தோண்டப்பட்டது, அதற்குப் பின்னர் அதிக திட்டங்களை தனது பட்டியலில் சேர்த்துக் கொண்டது மஸ்க் நிறுவனம்.

எக்ஸ்-பாக்ஸ் கண்ட்ரோலர் எந்திரங்கள்

எக்ஸ்-பாக்ஸ் கண்ட்ரோலர் மூலம் ராட்சஸ எந்திரங்களை இயக்குவது இதுதான் முதல் முறை அல்ல, இதற்கு முன்பு 2017 ஆண்டில் அமெரிக்க கடற்படை, விர்ஜினியாவில் நீர்மூழ்கிக் கப்பல்களை எக்ஸ்-பாக்ஸ் 360 கண்ட்ரோலர் கொண்டு இயக்கியது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இராணுவத்தின் ஆன்ட்டி-டிரோன் லேசர்கள் எக்ஸ்-பாக்ஸ் 360 கண்ட்ரோலர் மூலம் இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English Summary

Boring Company releases video of engineers steering massive tunneling machine with an XBOX controller : Read more about this in Tamil GizBot