ஸ்டீபன் ஹாக்கிங்-ஐ ஆத்திரமூட்டிய அந்த 7 தருணங்கள்!

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது மரணத்திற்கு முன், மனிதகுலத்தின் நலனுக்காக ஒரு முழுமையான மற்றும் நம்பமுடியாத செல்வாக்கு செலுத்தும் வாழ்க்கை வாழ்ந்தார்.


ஸ்டீபன் ஹாக்கிங் எப்போதும் மிகச்சிறந்ந விஞ்ஞானியாக இருந்தார். கருந்துளைகள்(ப்ளேக் ஹோல்ஸ்) மற்றும் பிரபஞ்சம் தொடர்பான இவரது பணி அவரை ஒவ்வொரு வீடுகளுக்கும் கொண்டு சேர்த்தது.

Advertisement


20 வயதுகளின் துவக்கத்தில் இயக்கு நரம்பணு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், தனது வாழ்நாள் தொடர்பான அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கினார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது மரணத்திற்கு முன், மனிதகுலத்தின் நலனுக்காக ஒரு முழுமையான மற்றும் நம்பமுடியாத செல்வாக்கு செலுத்தும் வாழ்க்கை வாழ்ந்தார்.

இந்த பரந்த பரபஞ்சத்தில் அவரது எண்ணங்களும் உத்வேகமும் மக்களை சமமான அளவில் ஊக்குவிக்கும் மற்றும் தூண்டும். ஆனால் அதற்கு நேர்மாறான 7 விசயங்கள் இதோ.

Advertisement

1) கருந்துளைகள் அவ்வளவு கருப்பானவை இல்லை

1970 களில் ஸ்டீபன் ஹாக்கிங்-ஐ மிகவும் ஆத்திரமூட்டிய தருணங்களில் ஒன்று,கருந்துளைகள் கருப்பாக இல்லை என கூறியது ஆகும். அவரது கோட்பாட்டின் படி, ஒளி உண்மையில் தனநு நிகழ்வின் எல்லைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

இந்த அறிவிப்பு உண்மையில் இயற்பியல் உலகத்தை தலைகீழாக மாற்றியது மட்டுமின்றி, கருந்துளைகள் எப்படி செயல்படும் என்ற நமது பார்வையையும் மாற்றியது.


ஹாக்கிங் தனது இந்த பணியை 1974 இல் நிறைவு செய்த நிலையில், அவரது அனுமான கருந்துளை ஒளி இன்று ஹாக்கிங் கதிரியக்கம் அல்லது ஹாக்கிங்-பென்கின்ஸ்டைன் கதிர்வீச்சு என அறியப்படுகிறது. இதுவரை அத்தகைய உமிழ்வுகளை யாரும் காணவில்லை எனினும், பெரும்பாலான இயற்பியலாளர்கள் அவற்றை நம்புகின்றனர்.

2. கருந்துளை மீது பந்தயம் கட்டி தோற்ற ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்-ஐ அவரது வாழ்க்கை முழுவதும் பந்தயம் கட்டுவதில் இருந்து அந்தியப்படுத்தமுடியாது. பொழுதுபோக்கிற்காக அதை செய்தாலும், உண்மையில் அவற்றில் பெரும்பாலானவற்றில் தோல்வியடைந்துள்ளார்.

கால்டெக் இயற்பியலாளரிடம் தோற்றது தான் இவரது பிரபல பந்தயம். 1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்,, சைக்னஸ் எக்ஸ் -1 ( கேலக்ஸியில் உள்ள மிகப்பெரிய எக்ஸ் ரே மூலம்) என்ற ஒரு கருந்துளை இல்லை என பந்தயம் கட்டினார்.


இன்று சைக்னஸ் எக்ஸ்-1 உண்மையில் ஒரு கருந்துளை என இயற்பியல் வல்லுநர்கள் பரவலாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

3.ஹிக்ஸ் போசன் பற்றிய பந்தயத்திலும் தோற்ற ஹாக்கிங்

பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் தனது சொந்த கருத்துக்களுக்கு எதிராக 2012 ல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் கோர்டன் கேனிடன் பந்தயம் கட்டி £ 100 இழந்தார்.

ஹிக்ஸ் துகளை கண்டுபிடிக்க முடியாது என பந்தயம் கட்டினார் ஹாக்கிங். பீட்டர் ஹிக்ஸின் அசாத்தியமான பணியை பற்றி தெரியாமல், ஹாக்கிங் இந்த.துகளை கண்டறிய முடியாது என நம்பினார்.

பின்னர் அந்த கசப்பான சம்பவங்களை எல்லாம் மறந்து, பீட்டர் ஹிக்ஸ்-க்கு அவரது மர்ம துகள் பற்றிய பணிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

4.கருந்துளைகள் பற்றிய மற்றொரு பெரிய பந்தயத்தை இழந்தார்

1997 ஆம் ஆண்டில் ஹாக்கிங், கால்டெக்கின் ஜான் ப்ரீஸ்கில் என்பவருடன் கருந்துளையில் தகவல்கள் காணாமல் போகின்றன என பந்தயம் கட்டினார். அதற்கு மாறாக வாதிட்ட ஜான், உண்மையில் தகவல்கள் கருந்துளையில் பாதுகாக்கப்படுகிறது என்று நம்பினார்.

பந்தயத்தில் தோற்றவர் வெற்றியாளருக்கு "எந்த தகவலும் எளிதில் மீட்க முடியும்" வகையிலான ஒரு என்சைக்ளோபீடியாவை வாங்கிதரவேண்டும்.

"தகவல் தங்கள் பிரபஞ்சத்தில் உறுதியாக உள்ளது, "என கண்டறிந்த ஹாக்கிங், டப்ளினில் நடைபெற்ற 17 வது சர்வதேச பொது சார்பியல் மற்றும் ஈர்ப்பு பற்றிய மாநாட்டில் அதை அறிவித்தார்.

5) செயற்கை நுண்ணறிவு பற்றி கடுமையாக எச்சரித்த ஹாக்கிங்

ப்ரீப் ஆன்சர்ஸ் டூ தி பிக் கொசின்ஸ் எனும் இவரது புத்தகத்தில், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை பற்றிய தனது நம்பிக்கையையும் பயத்தையும் தெரிவித்துள்ளார். உலகில் பல பெரிய சிந்தனையாளர்களைப் போலவே, தவிர்க்க முடியாத ஏஐ நம்மைத் தவிர்த்து, மனிதனுக்கு ஆச்சரியமளிக்கும் என அவர் நம்பினார்.

ஏஐ இரக்கமுள்ளதாக இருப்பதற்கு பதிலாக, தீயகுணமுள்ளதாக இருக்கும் என பெரும்பாலோர் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் ஹாக்கிங் இதில் மிகவும் உறுதியாக இல்லை. நாம் மிக அதிகமாக தலையிடாத வரை பிரச்சினை இல்லை.

6)தனது கடைசி புத்தகத்தில் கடவுளின் கருத்தைத் ஒழிக்க முயன்ற ஹாக்கிங்

ஹாக்கிங் கடுமையான நாத்திகராக இருந்தார் என்பது இரகசியமாக இல்லை. ஆனால் ஒரு முறை "நாம் ஒரு நாள் கடவுளின் மனதை அறிந்திருப்போம்" என்று அவரது கருத்தால் வெளிப்படையாக பலரை முரண்பாடுகளால் குழப்பிவிட்டார்.

அவரது இறுதி புத்தகத்தில், ஹாக்கிங் கடவுளின் கருத்தை முழுமையாக போலி என நிரூபிக்கும் முயற்சி வரை சென்றார்.

7.பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை, அவர்கள் பூமிக்கு வரமாட்டார்கள் என நம்புவோம்

பிரபஞ்சத்தில் உள்ள வேற்றுகிரகவாசிகள் பற்றிய இவரது கருத்துக்கள் பிரபலமாக இருந்தது. இவரது பார்வையில், அங்கு மற்றொரு அறிவார்ந்த வாழ்க்கை உள்ளது. அது நாம் கண்டுபிடிப்பதற்காக அல்லது நம்மை கண்டுபிடிக்க காத்திருக்கிறது என்கிறார்.

Best Mobiles in India

English Summary

7 of Stephen Hawking's Most Provocative Moments: Read more about this in Tamil GizBot