Whatsapp அதிர்ச்சி தகவல்: பிப்., 1 முதல் பல்வேறு வகை போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது!


2020 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ள பட்டியலில் உங்கள் ஸ்மார்ட்போனும் உள்ளதா என்று முதலில் செக் செய்துகொள்ளுங்கள்.

Advertisement

வாட்ஸ் ஆப் சேவை முற்றிலும் துண்டிப்பு

வாட்ஸ் ஆப் சேவை இவர்களுக்கு முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது வாட்ஸ்அப் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, பல ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் செயல்படாமல் இருக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் 2020 ஆண்டு முதல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது.

Advertisement
உங்கள் போன் இந்த இயங்குதளத்தின் கீழ் உள்ளதா?

சமீபத்திய அறிவிப்பின்படி அண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் iOS 8 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட ஐபோன்களில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் சேவை இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் உங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேவ் செய்துகொள்ள இதுவே சரியான நேரம்.

புதிய வாட்ஸ் ஆப் கணக்குகள் புதிய வாட்ஸ் ஆப்

கணக்குகளை உருவாக்க முடியாது மேலும், இந்த அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் போன்களில், வாட்ஸ்அப் சேவை பயன்படுத்தி வரும் பயனர்களின் பழைய அக்கௌன்ட் 2020ம் ஆண்டு முதல் செயல்படாது. அதேபோல் இனி இவர்களால் புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கவோ அல்லது பழைய அக்கௌன்ட்டை பயன்படுத்தவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 முதல் செயல்படாது

அனைத்து விண்டோஸ் ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது. அதேபோல் விண்டோஸ் நிறுவனம் விண்டோஸ் 10 மொபைல் OS சேவையை முற்றிலுமாக நீக்கம் செய்கிறது. அதேபோல் KaiOS 2.5.1 பிளஸ், ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய போன்களில் மட்டும் வாட்ஸ் ஆப் சேவை தடையின்றி செயல்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றுமுதல் மேலே வழங்கப்பட்டுள்ள போன்களில் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது.

ஆண்ட்ராய்டு போன்களில் இயங்காது

வாட்ஸ் ஆப்பிற்கான ஆதரவு ஆனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் முடிவடையும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. சாஃப்ட்வேர் வெர்ஷன் 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய ஓஎஸ் கொண்டு அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் பிப்ரவரி 1 க்குப் பிறகு வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது

Best Mobiles in India

English Summary

whatsapp will not work on these phones from february 1