வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் ! தினசரி 3ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி.! திட்டம்?


வோடபோன் நிறுவனம் கடந்த வாரம் பல்வேறு அருமையான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்ததை தொடர்ந்து இந்த வாரமும் புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. அதன்படி இந்நிறுவனத்தின் ரூ.569-ப்ரீபெய்ட் திட்டத்தில் தரமான சலுகைகளை வழங்கியுள்ளது.

84நாட்கள் வழங்கப்படும்

அதாவது வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.569-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் 84நாட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ .569 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வோடபோன் பயனர்கள் வோடபோன் ப்ளே பயன்பாட்டை இலவசமாகப் பயன்படுத்த

முடியும், இது பயனர்களை லைவ் டிவி, ழுவுவு பயன்பாடுகளிலிருந்து வரும் திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கிறது. மற்ற நிறுவனங்கள் இதே பட்ஜெட்டில் என்ன சலுகைகள் கொடுக்கிறது என்பதைப் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ

ஜியோவின் ரூ.555-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 3000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் விவோ y9s.!

ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.558-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் தினசரி 3ஜிபி டேட்டா,வரம்பற்ற குரல் அழைப்புகள், 100எஸ்எம்எஸ்,ரோமிங் உள்ளிட்ட சலுகைகளை பெறமுடியும். குறிப்பாக 82நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இந்த ஏர்டெல் ரூ.558-ப்ரீபெய்ட் திட்டம்.

ரூ.225-ப்ரீபெய்ட்

மேலும் வோடபோன் நிறுவனம் அன்மையில் ரூ.225-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தரமான சலுகைகள் வழங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும் அதன்படி வரம்பற்ற லோக்கல், எஸ்டிடி, ரோமிங் அழைப்புகள், 4ஜிபி 3ஜி/2ஜி டேட்டா, 600எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 48நாட்கள் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்;கது.

Most Read Articles

Best Mobiles in India

Have a great day!
Read more...

English Summary

Vodafone Rs 569 Prepaid Plan now offers 3GB Daily Data for 84 Days Validity : Read more about this in Tamil GizBot