வோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா?


வோடபோன் நிறுவனம் தொடர்ந்து ஜியோ, ஏர்டெல்,பிஎஸ்என்எல் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி வோடபோன் அறிமுகம் செய்யும் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

48நாட்கள்

வோடபோன் நிறுவனம் ரூ.225-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தரமான சலுகைகள் வழங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும் அதன்படி வரம்பற்ற லோக்கல், எஸ்டிடி, ரோமிங் அழைப்புகள், 4ஜிபி 3ஜி/2ஜி டேட்டா, 600எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 48நாட்கள் வழங்குகிறது.

ஜியோ-ஏர்டெல்

அதேசமயம் ஜியோ நிறுவனம் தனது 299-திட்டத்தில் 2ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ், உள்ளிட்ட சலுகைகளை 28நாட்கள் மட்டுமே வழங்குகிறது. பின்பு ஏர்டெல் நிறுவனம் தனது 249-திட்டத்தில் 2ஜிபி டேட்டா வரம்பற்ற குரல் அழைப்புகள்,

100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 28நாட்கள் மட்டுமே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன் நிறுவனம் அன்மையில் வழங்கிய சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ரூ.999-மதிப்புடைய RedX

அன்மையில் வோடபோன் நிறுவனம் ரூ.999- RedXபோஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. ரூ.999-மதிப்புடைய RedX திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா சலுகை, சர்வதேச அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என வோடபோன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள்

20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள் கிடைக்கும் ரூ.999-மதிப்புடைய இந்த RedX திட்டமானது 50சதவிகிதம் கூடுதல் இண்டர்நெட் வேகம் நன்மையை வழங்கும் என தெரிவித்துள்ளது. பின்பு இதனுடன் 20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் பிரீமியம் கஸ்டமர் சேவைகள், விமானநிலைய சலுகைகள், ஹோட்டல் முன்பதிவுகளுக்கான தள்ளுபடிகள்,மற்றும் ஸ்மார்ட்போன்களுக்குப் பிரத்யேக டீல்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.

150 நிமிட இலவச அழைப்பு

முன்னதாக, வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ .45 ஆல்-ரவுண்டர் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரீபெய்ட் பேக்கின் கீழ், உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் தேசிய ரோமிங்கில் பயனருக்கு 150 நிமிட இலவச அழைப்பு கிடைக்கிறது. இதில் 250 எம்.பி 4 ஜி டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்ஸும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வருகிறது

ரிலையன்ஸ் ஜியோ போலல்லாமல் வோடபோன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அதன் சந்தாதாரர்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கிறது.

Most Read Articles

Best Mobiles in India

Have a great day!
Read more...

English Summary

Vodafone Offering 4GB Data For Rs. 225: Validity And Other Benefits: Read more about this in Tamil GizBot