வோடோபோன் இன் அதிரடி சலுகை.! ரூ.597 பேக் தற்பொழுது ரூ.396 மட்டுமே.!


வோடோபோன் நிறுவனம் தனது புதிய சலுகை திட்டத்தை அறிவித்திருக்கிறது. இதன் படி பழைய ரூ.597 பேக் தற்பொழுது 33% தள்ளுபடியில் வெறும் ரூ.396 க்கு கிடைக்குமென்று அறிவித்திருக்கிறது.

இந்த புதிய தித்தன் கீழ் விற்பனைக்கு வந்துள்ள ரூ.396 பிளான் உங்களுக்கு இன்று முதல் கிடைக்கும். இந்த புதிய திட்ட சலுகையில் உங்களுக்கான ப்ரீபெய்ட் பிளான் ஐ தேர்வு செய்துகொள்ள வோடோபோன் வலைத்தளம் மற்றும் மை வோடோபோன் செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இதன் திட்டத்தின் படி வோடோபோன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு தினமும் 1.4ஜிபி, 4ஜி டேட்டா சேவை வழங்கப்படும். இந்த பேக் உங்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த ரூ.396 ப்ரீபெய்ட் பிளான் உங்களுக்கு மொத்தமாக 117ஜிபி டேட்டா சேவையை 4ஜி தரவரிசையில் வழங்குகிறது.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்டிடி கால்ஸ் மற்றும் இலவச ரோமிங் சேவை மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் என அனைத்துச் சேவையையும் வழங்குகிறது. இத்துடன் கூடுதலாக மை வோடோபோன் செயலி மூலம் வாங்கும் அனைத்து ரீசார்ஜ் பிளான்களுக்கும் 5% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


Read More About: Mobile news scitech tech news
Have a great day!
Read more...

English Summary

Vodafone now offers Rs 597 plan for just Rs 396 : Read more about this in Tamil GizBot