Vodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா.! வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.!


ஏர்டெல்,ஜியோ நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் வோடபோன் நிறுவனம் தரமான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

Advertisement

180நாட்கள்

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய திட்டத்தின் விரை ரூ.997-ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180நாட்கள்ஆகும். மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பொறுத்தவரை தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு,
தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும்.

Advertisement
ரூ.599-திட்டம்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ரூ.599-திட்டத்தின் அடுத்த பதிப்பாக ரூ.997 வருகிறது, அதன்படி ரூ.599-திட்டம்ஆனது 84நாட்களுக்கு வழங்கும் அதே நன்மைகளை ரூ.997-திட்டம் 180நாட்களுக்கு வழங்குகிறது. கண்டிப்பாக
வோடபோனின் இந்த ரூ.997-திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.

இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

தற்போது வரையிலாக வோடபோன் ரூ.997 ரீசார்ஜ் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது,மேலும் வோடபோன் நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் அறிமுகம் செய்துள்ள இந்த ரூ.99 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என ஒட்டுமொத்தமாக 18 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் சலுகையாக ரூ.999 மதிப்புள்ள ஜீ 5 சந்தா, வோடபோன் ப்ளே சந்தாவும் கிடைக்கிறது. வோடபோனின் இந்த திட்டம் தற்போது கொல்கத்தா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உ.பி. கிழக்கு, உ.பி. மேற்கு மற்றும் மேற்கு வங்க வட்டங்களில் கிடைக்கிறது.

வோடபோன் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் அறிமுகம் செய்துள்ள இந்த ரூ.555 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என ஒட்டுமொத்தமாக 70 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் சலுகையாக ரூ.999 மதிப்புள்ள ஜீ 5 சந்தா, வோடபோன் ப்ளே சந்தாவும் கிடைக்கிறது. வோடபோனின் இந்த புதிய திட்டம் மும்பையில் மட்டுமே ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வுக்கு பின் அறிமுகம் செய்யப்படும் புதிய திட்டங்கள்

தொலைத் தொடர்புஆபரேட்டர் நிறுவனங்கள் அண்மையில் அதன் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல புதிய திட்டங்களை நிறுவனங்கள் விலை மாற்றங்களுடன் அறிமுகம் செய்து வருகிறது. கட்டண உயர்வுக்குப் பிறகு, வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் அதிக விலையுள்ள திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை.

Best Mobiles in India

English Summary

Vodafone introduces Rs 997 prepaid plan offering 1.5GB data per day : Read more about this in Tamil GizBot