குடும்பத்துக்கான போஸ்ட்பெய்ட் திட்டம்: வோடபோன் ஐடியா அட்டகாச அறிமுகம்!
வோடபோன் ஐடியா தங்களது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. சமீபத்தில் வோடபோன் ஐடியா தங்களது பிராண்டை விஐ என அறிவித்தது. விஐ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் தக்கவைக்கவும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.948 என்ற குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டமானது உத்திரபிரதேச கிழக்கு பகுதியில் மட்டும் தற்போதுவரை கிடைக்கிறது. இந்த திட்டமானது ரூ.699 என்டெர்டெயின்மென்ட் ப்ளஸ் திட்டத்தின் மேம்படுத்த திட்டமாக இருக்கிறது.

ரூ.948 என்ற விலையில் போஸ்ட்பெய்ட் திட்டம்
ரூ.948 திட்டமானது குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இரண்டு இணைப்புகளுக்கான ஆதரவுடன் இது வருகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் இணைப்புக்கு ரூ.249 வசூல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இரண்டாம் இணைப்பிற்கு 30ஜிபி அதிவேக தரவு
புதிய குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தில் முதன்மை இணைப்பிற்கு வரம்பற்ற டேட்டாவையும், இரண்டாம் நிலை இணைப்பிற்கு 30ஜிபி அதிவேக தரவையும் வழங்குகிறது. டேட்டா வரம்பு முடிந்ததும் கூடுதல் இணைப்பிற்கு ஒரு ஜிபிக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரம்பற்ற குரல் அழைப்புகள்
அனைத்து நெட்வொர்க் அழைப்பிற்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இரண்டு இணைப்புகளுக்கும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. கூடுதல் இணைப்பிற்கு இலவச விஐ திரைப்படங்கள் சந்தா மற்றும் டிவி சந்தா சலுகையை வழங்குகிறது.

அமேசான் பிரைம், ஜீ5 ப்ரீமியம் சந்தா சலுகை
ரூ.948 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம், ஒரு வருடத்திற்கான ஜீ5 ப்ரீமியம் சந்தா மற்றும் ஒரு வருடத்திற்கான விஐ மூவிஸ் மற்றும் டிவி பயன்பாட்டு சந்தா ஆகியவற்றுடனான இலவச சந்தாவை வழங்குகிறது.

ரெட்எக்ஸ் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்
விஐ நிறுவனம் முன்னதாக ரூ.1,348 ரெட்எக்ஸ் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திலும் இரண்டு இணைப்புகளை நிறுவனம் வழங்குகிறது. அதேபோல் முதன்மை இணைப்பிற்கான வரம்பற்ற இணைய சேவையையும், இரண்டாம் நிலை இணைப்புக்கு 30 ஜிபி அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது.

Vi மூவிஸ் & டிவி பயன்பாட்டு சலுகை
மேலும் இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. அதோடு ஒரு வருடம் நெட்ஃபிக்ஸ் சந்தா, அமேசான் பிரைமுக்கான ஒரு வருடம் இலவச சந்தா, ஒரு வருடம் ZEE5 பிரீமியம் மற்றும் Vi மூவிஸ் & டிவி பயன்பாட்டிற்கு இலவச சந்தா அணுகல் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








