வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் விவோ வ்யை97 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!


விவோ நிறுவனம் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் விவோ வ்யை97 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், ரோஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வ்யை97 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்திய மொபைல் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்
செய்யப்படும் என்று விவோ நிறுவனம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

விவோ வ்யை97

விவோ வ்யை97 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.3-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

விவோ வ்யை97 ஸ்மார்ட்போன் பொதுவாக 16எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் வாட்டர் டிராப் டிஸ்பிளே இதனுள் இடம்பெற்றுள்ளதால் அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 8.1

மேலும் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஹீலியோ பி60 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு பாதுகாப்பான வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வ்யை97 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 3240 பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது விவோ வ்யை97.


Read More About: tech news vivo android smartphone
Have a great day!
Read more...

English Summary

Vivo Y97 lauched with waterdrop notch display and dual rear cameras: Read more about this in Tamil GizBot