வெளிநாட்டு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த டெல்லி ஹோட்டல் ஊழியர்கள்: வீடியோ வெளியிட்டார்.!


இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு. இந்தியாவில் தினமும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் புள்ளி விவரங்களும் பெண்கள் பாலியல் துன்புறுத்தழுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களை இந்தியாவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்கள் பொது வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. பெண்கள் தெருக்களில் செல்லும் போது உள்ளாக்கப்படும் பாலியல் தொந்தரவு குறித்து தெரியவரும் என்று டெல்லியில் ஹோட்டல் ஊழியர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளக்கப்பட்டதாக அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் கூறுகின்றார். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் குறித்து இனி காணலாம்.!

வெளிநாட்டு பெண்:

டிராவல் லைட் என்ற ஒரு பிரபலமான யூடியூப் சேனலை சேர்ந்த அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண், கடந்த மாதம் தனது காதலருடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தார். பல்வேறு இடங்களுக்கு சென்ற அந்த வெளிநாட்டு இளம் பெண் மகிழ்ச்சியாக இருந்தார். கடந்த வாரம் டெல்லிக்கு சென்ற அவர் முதல் பதிவு வீடியோவை வெளியிருந்திருந்தார்.

பாலியல் தொந்தரவு குறித்து வீடியோ:

அந்த அமெரிக்க நாட்டு இளம் பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை 18 நிமிடம் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்தியாவில் தெருக்களில் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளும், அடுத்து அடுத்து பல்வேறு முறை பாலியல் தொந்தரவுகளுக்கு பாதிக்கப்பட்டதாகவும் கூறுகின்றார்.

டெல்லி ஹோட்டலில் பாலியல் தொந்தரவு:

இந்த அமெரிக்க நாட்டு இளம் பெண் டெல்லியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த ஹோட்டல் ஊழியர்களாலும் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளக்கப்பட்டதாகவும், தனது தனிப்பட்ட தகவல்களை வெளிட்டும் பாலியல் துன்புறுத்தலை செய்தார்கள் என்றும் அந்த பெண் கூறுகின்றார். டெல்லியில் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஊழியர்கள் தனிப்பட்ட தகவலை பகிர்ந்து பாலியல் தொந்தரவும் செய்தாக பேசியிருக்கின்றார்.

தற்கொலை முடிவு:

நிலைமை மீறியிருந்தால் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் தெளிவாக கூறியிருக்கின்றார். மேலும் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் மீது மட்டும் பாலியல் தொந்தரவு நடக்கின்றது என்று தெளிவாக கூறியிருக்கின்றார். அவர் அதிகாலையில் ஹோட்டல் இருந்து தப்பித்துக் கொண்டார். எனினும் அந்த அமெரிக்க நாட்டு இளம் பெண் விமானத்தில் ஏறி செல்லவும் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

போலீசார் நடவடிக்கை:

புதுடெல்லி பஜார் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஊழியர்கள் தகவை தட்டியும், போன் செய்தும் அமெரிக்க நாட்டு இளம்பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்து பிறகு லலித் என்பவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்த தகவலின்படி டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India
Read More About: smartphone technology news india

Have a great day!
Read more...

English Summary

US Travel Vlogger Narrates Horrifying Ordeal Of Sexual Assault By Staff In Delhi Hotels : Read more about this in Tamil GizBot