திமுக நிர்வாகி: பிரியாணி குத்து சண்டை வீரரைத் தொடர்ந்து மொபைல் குத்துச் சண்டை வீரர்.! வைரல் வீடியோ.!


என்னதான் ஆச்சு நம் நாட்டிற்கு, மாதம் மாதம் மல்யுத்த வீரர்களும், குத்துச் சண்டை வீரர்களும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர். அதுவும் திமுக வில் மட்டும் அதிக குத்து சண்டை வீரர்கள் உருவாகிவருவது இந்த ஆண்டின் சிறப்பு போல? பாவம் தலைவர்.

இவர்களை எல்லாம் அடையாளம் காட்டுவதற்காவே சமூக வலைத்தளங்களும் சிசிடிவி கேமராக்களும் 24 மணிநேரமும் அயராது உழைத்து வருகிறது.

யுவராஜ் பிரியாணி குத்துச் சண்டை வீரர்

அண்மையில் யுவராஜ் குத்துச் சண்டை வீரர் பிரியாணிக்காக பிரபலம் அடைந்து வலைத்தளம் முழுக்க அவர் புகழ் பறந்தது யாரும் மறந்திருக்க மாட்டோம். இன்னமும் கூட அவரின் வீர சாகச குத்துச் சண்டை மூவ்-கள் வலைத்தளங்களில் வைரல் ஆகா பரவிக்கொண்டுதான் இருக்கிறது.

மொபைல் குத்துச்சண்டை வீரர்

இந்த நிலையில் அடுத்த குத்துச்சண்டை வீரர் தனது சாகச மூவ்-களை ஒரு மொபைல் கடை உரிமையாளிரிடம் காட்டி அவரின் அன்பையும், பரிசையும் மூஞ்சியில் வாங்கியுள்ளார். இந்தக் குத்து சண்டை வீரரின் சிஷ்யன் மட்டும் என்ன சளைத்தவரா, ஆட்டத்தைத் துவக்கி வைத்தவரே அவர் தான். குரு 8 ஆடி கொடுத்தால் சிஷ்யன் 16 அடி கொடுப்பான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

திருவண்ணாமலை கணேஷ் & ரகுபதி

திருவண்ணாமலையில் குத்து சண்டை வீரர் ரகுபதி (29) மற்றும் குட்டி குத்துச் சண்டை வீரர் கணேஷ் (26) என்பவருடன் தானிப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள மணிவண்ணன் என்பவரின் செல்போன் கடைக்கு சென்றுள்ளார். பழுதான செல்போனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று ரகுபதி கேட்டுக்கொண்டிருக்கும் போதே குட்டி குத்துச் சண்டை வீரர்க்கு வீரம் பீறிக்கொண்டு வர குரு டென்ஷன் ஆகிக் கடை உரிமையாளரிடம் தன் சாகசத்தைக் காட்ட துவங்கிவிட்டார்.

நாக் அவுட்

இவர்கள் தங்கள் குத்து சண்டை சாகசத்தை காட்ட துவங்கிய உடன் கடை உரிமையாளர் மற்றும் அவரின் ஊழியரும் குத்துசண்டை வீரர்களாகி முதல் ரவுண்டு இல் தொம்சம் செய்துவிட்டனர். இரண்டாவது ரவுண்டு இல் கடை ஊழியர் மற்றும் உரிமையாளர் நாக் அவுட் செய்யப்பட்டார்.

சிசிடிவி கேமரா வைரல் வீடியோ

இந்த சண்டை காட்சி கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, தற்பொழுது இந்த வீடியோ அனைத்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரியாணி கடையில் நடைபெற்ற தவறுக்கு தலைவர் ஸ்டாலின் கடை உரிமையாளரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். பாவம் தலைவருக்கு எவ்ளோ வேலை தான் வைப்பார்கள், மறுபடியும் முதல இருந்த?


Read More About: smartphone scitech tech news specs
Have a great day!
Read more...

English Summary

Thiruvannamalai Mobile shop Fight CCTV Video : Read more about this in Tamil GizBot