விண்வெளியில் பயங்கர அணு ஆயுதங்கள் : நமக்கு ஆபத்து ஏற்படுமா?

மற்றும் ஒன்று அல்லது மற்றொரு வடிவில் , விண்வெளி காலம் இருக்கும் வரையில் பல்வேறு நிறுவனங்கள் ஏவுகணைகளை செலுத்துவதற்கும் மற்ற நடவடிக்கைகளுக்கும் விண்வெளியை பயன்படுத்துக்கொண்டு தான் இருக்கும்.


ஆய்வுகள் நடத்துவதற்கு விண்வெளி எப்படி சிறந்த இடமாக திகழ்கிறதோ, அதேபோல இராணுவ ரீதியான அனுகூலத்தை பெறவும் சிறப்பான இடமாக இருக்கிறது. பல தசாப்தங்களாக உளவு செயற்கைகோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement


மற்றும் ஒன்று அல்லது மற்றொரு வடிவில் , விண்வெளி காலம் இருக்கும் வரையில் பல்வேறு நிறுவனங்கள் ஏவுகணைகளை செலுத்துவதற்கும் மற்ற நடவடிக்கைகளுக்கும் விண்வெளியை பயன்படுத்துக்கொண்டு தான் இருக்கும். இப்போது வரை புழக்கத்தில் உள்ள டாப் 10 விண்வெளி ஆயுதங்களை இங்கே காணலாம்.

Advertisement

ஏவுகணைகள்

1000 ஆண்டுகளுக்கு மேலாக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருவதால், என்சைக்ளோபீடியாவில் கூட முதல் ராக்கெட்டின் வரலாறு ஆதாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை. சீனாவில் முதன்முதலில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, பின்னர் ஐரோப்பியாவிலும், இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டிலும் ராக்கெட் முதலில் பயன்படுத்தப்பட்டது. மேலும் ராக்கெட்கள் மெக்ஸிகன் அமெரிக்கன் போர், முதல் உலகப்போர்,அமெரிக்கன் சிவில் போரில் பயன்படுத்தப்பட்டது.

பெரிதும் மேம்படுத்தப்பட்ட இராக்கெட்கள் இரண்டாம் உலகப்போரில் காணக்கிடைத்தது.ஜெர்மன் வி2 இராக்கெட் அதிக கவனத்தை ஈர்த்து, பிரிட்டனில் இருந்து 1000 ஏவுகணைகள் ஏவப்பட்டன.ஜெர்மனி போரில் தோற்றபோது,பல்வேறு நாடுகளின் இராக்கெட் விஞ்ஞானிகளை சோவியத் இரஷ்யா மற்றும் அமெரிக்கா பணியமர்த்தியது. இதன் மூலம் இவ்விரு நாடுகளிலும் இராக்கெட் தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது. இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் பயன்பாட்டில் உள்ளன.

டார்பாவின் மாகிம் (DARPA's MAHEM)

அமெரிக்காவின் டிபென்ல் அட்வான்ஸ்டு ரிசர்ச் ப்ராஜெட் ஏஜென்சி(DARPA)ஆல் 2008ல் மேக்னெடோ ஹைட்ரோடைனமிக் எக்ஸ்போசிவ் மியூனிசன்( MAHEM)

எனும் ஆயுதம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், அதிக செயல்திறன், அதிக கட்டுப்பாடு மற்றும் ஒரே நேரத்தில் துல்லியமாக பல ஜெட்களை ஒரே நேரத்தில் செலுத்தும் ஆற்றல் இருக்கும் என டார்பா இணையதளம் கூறுகிறது. இதை ஏவுகணைகள் மூலம் செலுத்த முடியும் என்கின்றனர் டார்பா அதிகாரிகள்.

ப்ராஜெக்ட் டி.எச்.இ.எல்

டேக்டிகல் ஹை எனர்ஜி லேசர் திட்டம் 1996லிருந்து 2005 வரை செயல்பாட்டில் இருந்தது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு திட்டம் ஆகும். 10 ஆண்டுகள் வடிவமைப்பின் போது, நிலத்தில் செயல்படும் இது, வானில் பறக்கும் 46 பீரங்கி குண்டுகள், இராக்கெட்களை அழித்தது.

இந்த திட்டம் தற்போது செயல்பாட்டில் இல்லை எனினும், இத்தொழில்நுட்பத்தை மறுகட்டமைப்பு செய்து அமெரிக்க இராணுவம் பயன்படுத்துகிறது.

ஆயுதம் தாங்கிய செயற்கைகோள்கள்

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பல செயற்கைகோள்கள் சுற்றிவரும் நிலையில், பூமியை தாக்க எந்நேரமும் தயாராக ஆயுதம் தாங்கிய செயற்கைகோள்கள் உள்ளன என்பதை நம்பமுடிகிறதா?. இது விண்வெளி சுற்றுவட்டப்பாதையில் வெடிக்கும் ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் பல்வேறு விண்வெளி ஒப்பந்தங்களுக்கு எதிராக இருந்தாலும்,சில இராணுவ நிறுவனங்களை இதைப்பற்றி சமீபகாலமாக ஆலோசனை செய்துவருகின்றன.

1950களில் ஒரு பிரபல அமெரிக்க திட்டமான தோர், கருத்துரு கட்டத்தையே தாண்டவில்லை."ரோட்ஸ் ப்ரம் காட்' என்ற திட்டத்தில், விண்வெளியில் இருந்து கைனடிக் எனர்ஜி ஆயுதங்கள் பூமியில் வீசப்படும். மேலும் சிறு செயற்கைகோள்கள் பிற செயற்கைகோள்கள் அல்லது பூமியை தாக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

சோவியத் யூனியனின் அல்மாஸ் விண்வெளி நிலையம்

1960களில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான அல்மாஸ் விண்வெளி நிலையம், கடலில் உள்ள டார்கெட்களை சோவியத் யூனியன் எளிதில் கண்டறியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. விண்வெளி சுற்றுவட்டப்பாதையில் மனிதர்கள் இருப்பதன் மூலம், போர்களில் தொடர்ந்து விரைவாக டார்கெட்களை மாற்றமுடியும்.

அமெரிக்காவின் மனிதர்கள் உள்ள ஆர்பிட் ஆய்வகம்

அமெரிக்காவின் விமானப்படை திட்டமான இது, 1963 முதல்1969 வரை செயல்பாட்டில் இருந்தாலும், எந்தவொரு விண்வெளி வீரரையும் விண்வெளிக்கு அனுப்பவில்லை. ஆனாலும் 17 வீரர்களை தேர்வுசெய்து, கலிபோர்னியாவால் ஏவுதளத்தை உருவாக்கி, நாசாவின் ஜெமினி ஏவுகலனை புதிய திட்டத்திற்காக மாற்றங்கள் செய்யப்பட்டன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பிராஜெக்ட் டோரியான் என்ற பெயரில் சோவியத் யூனியனை உளவு பார்ப்பது ஆகும்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்

இவை பூமியிலிருந்து 3500 மைல் தூரம் பறக்கக்கூடியது. சோவியத் யூனியன்1958ல் முதல் ஏவுகணையை செலுத்திய நிலையில், அமெரிக்கா 1959லும், அதன் பின்னர் பிற நாடுகளும் செலுத்தின. சமீபத்தில் இரஷ்யா, இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கின.

கணிணி அல்லது செயற்கைகோள் மூலம் கட்டுபடுத்தப்படும் இவற்றை , குறிப்பிட்ட நகரம் அல்லது நாட்டின் மீது குறிவைத்து ஏவமுடியும். இதன் மூலம் அணு, வேதியியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும்.

எக்ஸ்37 பி சுற்றுவட்ட சோதனை வாகனம்

விண்வெளியில் நான்கு கட்ட சோதனைகளுக்கு பிறகும், இந்த எக்ஸ்37 பி விண்வெளி வாகனம் சுற்றுவட்டப்பாதையில் என்ன செய்யவுள்ளது என தெளிவாக தெரியவில்லை. ஆனால் இது விமானப்படை ஆயுத வகையை சேர்ந்தது என சிலர் கூறுகின்றனர்.
மறுபடியும் பயன்படுத்தக்கூடிய நாசா விண்கலனின் சிறு வடிவம் போன்று இருக்கும் இது, சுற்றுவட்டப்பாதையில் ஓராண்டுக்கு மேலாக தானாகவே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டி - சாட்டிலைட் சிஸ்டம்

செயல்படாத அல்லது காலாவதியாகும் செயற்கைகோள்களை விண்வெளியிலேயே பாதுகாப்பாக அழிக்கும் திட்டம் தான் இது. 1985ல் எப்15ஏ என்று ஏவுகலன் மூலம் ஆண்டி சாட்டிலைட் ஏவுகணை ஏவப்பட்டு சால்விண்ட் பி78-1 செயற்கைகோள் அழிக்கப்பட்டது.

சிறுகோள்களை கையாளுதல்

சிறுகோள்கள் தான் மிகவும் ஆபத்தான அழிவை ஏற்படுத்துபவை என்பது அறிவியலாளர்கள் அறிந்ததே. வெறும் 6மைல் அகலமுள்ள விண்கல் தான் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களை அழித்தது என நம்பப்படுகிறது. அளவில் மிகச்சிறிய விண்கற்கள் கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.

Best Mobiles in India

English Summary

he Most Dangerous Space Weapons Ever : Read more about this in Tamil GizBot