Home
News

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. இனி ஜிமெயில் ID-யை மாற்றிக் கொள்ளலாம்.. சுந்தர் பிச்சை முக்கிய அறிவிப்பு..

கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த ஒரு பெரிய குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஏற்கனவே உள்ள ஜிமெயில் முகவரியை (Gmail ID) மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிமெயில் சேவையில், இதுவரை ஒருமுறை உருவாக்கிய முகவரியை மாற்ற முடியாது என்ற நிலை இருந்தது. தற்போது இந்த தடையை நீக்கி, புதிய முகவரியை மாற்றும் வசதியைக் கூகுள் CEO சுந்தர் பிச்சை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. இனி ஜிமெயில் ID-யை மாற்றி கொள்ளலாம்..

இந்த புதிய வசதி குறித்து எக்ஸ் தளத்தில் சுந்தர் பிச்சை வெளியிட்ட தகவலின்படி, 2024-ம் ஆண்டு நல்ல ஆண்டுதான், ஆனால் உங்கள் ஜிமெயில் முகவரி அதே ஆண்டிலேயே தேங்கி நிற்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பயனர்கள் தங்களது பழைய அல்லது பொருத்தமற்ற மெயில் முகவரிகளை மாற்ற நினைத்தால், தற்போது அதை எளிமையாக மாற்றிக் கொள்ளலாம். இதற்காகத் தனிப்பட்ட கூகுள் கணக்கு அமைப்புகளுக்குச் சென்று (Google Account Settings), கிடைக்கக்கூடிய புதிய பெயர்களில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் நீங்கள் ஜிமெயில் முகவரியை மாற்றினாலும், பழைய முகவரி கணக்குடனேயே இணைக்கப்பட்டிருக்கும். எனவே உங்கள் பழைய முகவரிக்கு யாராவது மின்னஞ்சல் அனுப்பினாலும், அவை தடையின்றி உங்கள் புதிய முகவரியின் இன்பாக்ஸிற்கு வந்து சேரும். மேலும் உங்களது பழைய முகவரியை யாரும் உரிமை கோர முடியாது. எனவே இதனால் பழைய தொடர்புகளை இழக்க நேரிடும் என்ற பயமின்றி பயனர்கள் தாராளமாகப் புதிய முகவரிக்கு மாறிக்கொள்ளலாம்.

இந்த புதிய அப்டேட் ஆனது @gmail.com என முடிவடையும் மெயில் முகவரிகளுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு கூறியபடி, ஒரு கூகுள் கணக்கில் பழைய ஜிமெயில் ஐடியை மாற்றி புதிய ஜிமெயில் யூசர்நேமை தேர்வு செய்யலாம், ஆனால் இந்த மாற்றத்தினால் Google Drive, Photos, YouTube, Play Store போன்ற போன்ற சேவைகளில் உள்ள டேட்டா, வாங்கிய சப்ஸ்கிரிப்ஷன்கள் அல்லது கணக்கு வரலாற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவலின்படி, இதில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அதாவது ஒரு முறை ஜிமெயில் யூசர்நேம் மாற்றிய பிறகு, அடுத்த மாற்றத்திற்கு 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் பழைய ஐடிக்கு மீண்டும் திரும்பும் வசதியும் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க.

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. இனி ஜிமெயில் ID-யை மாற்றி கொள்ளலாம்..

ஒரு கூகுள் கணக்கில் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே யூசர்நேம் மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே கணக்கில் காலப்போக்கில் 4 ஜிமெயில் முகவரிகள் வரை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஜிமெயில் சேவையில் வந்துள்ளது இந்த புதிய வசதி குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது, விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஜிமெயில் சேவையில் விரைவில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதில் அறிமுகமாகும் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sundar Pichai Unveils Gmail Feature to Easily Update Your Main Email Address
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X