1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக மாறும் சுந்தர் பிச்சையின் ஆல்பபெட் நிறுவனம்


சுந்தர் பிச்சை அவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டு என்று கூறினால் அது மிகையாகாது. அவர் பணிபுரிந்து வரும் கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் அதிகாரத்தை பெற்றார், அத்துடன் அந்நிறுவனத்தின் பங்குகள் மற்றும் மிகப்பெரிய சம்பள உயர்வும் அவருக்கு கிடைத்தது. இந்த நிலையில் 2020ஆம் ஆண்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவருக்கு ஒரு நல்ல ஆண்டாகவே தொடங்கியுள்ளது.

Advertisement

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை சி.இ.ஓ.வாக பதவி ஏற்றதும் ஆல்பாபெட் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை பெறும் என்று கூறப்பட்டதால் அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்ந்தன. 2020 தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகள் விளம்பர செய்ய கூகுளையே நம்பியுள்ளது.

Advertisement
969 பில்லியன் டாலர் என உயர்ந்தது

இதன் விளைவாக கடந்த புதன்கிழமை பங்குச்சந்தை நிறைவடையும்போது இந்நிறுவனத்தின் பங்குகள் 969 பில்லியன் டாலர் என உயர்ந்தது. இது மிகவும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி என்பதும் கடந்த ஜூன் 2019 ஐ விட 35 சதவிகிதத்திற்கும் மேலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

விளம்பர வருவாயின் அதிகரிப்பு காரணமாக ஆல்பாபெட்டின் வளர்ச்சி உயர்ந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தாலும், பலர் அதன் வீடியோ ஸ்ட்ரீமினுடன் பகுதியான யூடியூப் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, 40 ஆய்வாளர்கள் ஆல்பாபெட் பங்குகளை வாங்க பரிந்துரை செய்ன்றனர், அவர்களில் ஐந்து பேர் இந்நிறுவனத்தின் பங்குகளை கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் பங்குகளின் விலை இலக்கை சுமார் $1,467 ஆக சந்தையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை சமீபத்திய விலையை விட நான்கு சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

மைக்ரோசாஃப்ட்

கூகிளின் தாய் நிறுவனம் ஆல்பாபெட் ஆய்வாளர்களின் நேர்மறையான விமர்சனத்தால் இலக்கை உயர்த்து வருகிறது. சத்யா நாதெல்லாவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குப் பிறகு, ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை கடந்த நிறுவனமாக இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரி தலைமையில் செயல்படும் இந்நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.

ஆப்பிள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்குப் பிறகு, ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தொடும் நான்காவது தொழில்நுட்ப நிறுவனம் ஆல்பபெட் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்பாபெட் நிறுவனம் என்பது கூகிள் சியர்ச், யூடியூப் மற்றும் ஆண்ட்ராய்டுக்கு மட்டுமே சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அந்நிறுவனம் இன்னும் பல ஆச்சரியத்தக்க நிறுவனங்களையும் கொண்டது. தன்னுடைய கட்டுப்பாட்டில் பல வணிகளை அது கையில் வைத்துள்ளது.

தானாகவே ஓடும் கார் தொழில்நுட்ப வணிகமான வேமோ, சுகாதாரப் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம், அதிவேக ஜிகாபிட் இணைய இணைப்பு வலையமைப்பு நிறுவனமான கூகிள் ஃபைபர், மேம்பட்ட AI நிறுவனமான டீப் மைண்ட் மற்றும் பல நிறுவனங்கள் ஆல்பபெட் கைகளில் தான் உள்ளது. இவை அனைத்திற்கும் சுந்தர் பிச்சை தான் தற்போது தலைமை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English Summary

Sundar Pichai’s Alphabet Will Soon Be 4th Tech Company To Cross 1 Trillion-Dollar Value : Read more about this in Tamil GizBot