அமேசான், பிளிப்கார்ட்டை ஓரம்கட்டும் Jiomart: 200 பகுதிகளில் சேவை தொடக்கம்!


ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட், ஆன்லைன் சில்லறை விற்பனை சேவை முதல் கட்டமாக 200 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

உலகின் 212 நாடுகளில் கொரோனா தாக்கம்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலகின் 212 நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement
கொரோனா தடுப்பின் பிரதான நடவடிக்கை

கொரோனா தடுப்பதின் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறுகுறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் பொருளாதார வீழ்ச்சி, வேலையாப்பின்மை என பல இன்னல்களை உலக நாடுகள் சந்தித்து வருகிறது.

1600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்

சொமேட்டோ தனது பணியாளர்களில் 13 சதவீதம் அதாவது 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஸ்விகி நிறுவனமும் 1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. ஸ்விக்கி, சொமேட்டோ பின்னடைவை சந்தித்து வரும் நேரத்தில் அமேசான் அதிரடியாக உணவு டெலிவரி சேவையை இந்தியாவில் தொடங்கியது. இதையடுத்து ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் இந்தியாவில் 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தது.

ஆன்லைன் ஜியோமார்ட் சேவை

அதேபோல் பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 10 சதவீத பங்குகளை வாங்கியது, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனமும் ஜியோவுடன் கூட்டு சேர்த்து, ஜியோவின் ஆன்லைன் ஜியோமார்ட் சேவையைத் துவங்குமென்று வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி ஜியோ தற்பொழுது வாட்ஸ்அப் மூலம் தனது ஜியோமார்ட் சேவையைத் துவங்கியுள்ளது.

பல மாதங்கள் சோதனைக் கட்டம்

ஜியோவின் ஜியோ மார்ட் சேவையானது பல மாதங்கள் சோதனைக் கட்டத்தில் இருந்து தற்போது செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதேபோல் ஜியோமார்ட் சோதனை அடிப்படையிலான மகாராஷ்டிரா மும்பையில் நடத்தப்பட்டது. தற்போது இந்த சேவை 200 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

எம் ஆர் பி விலையிலிருந்து 5 சதவீதம் குறைந்த விலையில்

ஜியோமார்ட் தளத்தில் பல பொருள்களும் எம் ஆர் பி விலையிலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஆன்லைன் மளிகை விற்பனையை ஜியோ மார்ட் சில்லரை விற்பனை கடைகள் மூலம் தொடங்கியுள்ளது. இதன்மூலம் சில்லரை விற்பனையாளர்கள் தங்கள் சொந்த பிராண்டுகளை விற்பனை செய்யமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

வாட்ஸ் ஆப் மூலம் ஜியோமார்ட் சேவை

வாட்ஸ் ஆப் மூலம் ஜியோமார்ட் சேவை இயக்கப்படுவதால் சுமார் 400 மில்லியன் பயனர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப்பின் தளம் ஜியோமார்ட்டின் வரம்பை அதிகரிக்க உதவும். இது தவிர, உங்கள் ஆர்டரை வழங்குவதற்கு முன் இந்த ஆன்லைன் மளிகை சேவையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்கள் உள்ளது. முதற்கட்டமாக வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி முன்பதிவுகளை நடத்தப்பட்டது.

ஜியோமார்ட் வலைதளத்தில் ஆர்டர் செய்யலாம்

வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஹாய் என்று அனுப்பியதும் அதன் சேவை குறித்த விவரங்கள் வரும். அதோடு ஆர்டர் செய்வதற்கான இணைப்பும் வரும். தொலைபேசியிலிருந்து டெலிவரி கிடைக்கவில்லை என்று ஜியோமார்ட் வலைத்தளத்தின் கேள்விகள் பிரிவு கூறுகிறது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் தற்போது ஜியோமார்ட் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆர்டர் செய்யலாம்.

முதல்கட்டமாக 200 நகரங்களில்

ஜியோ மார்ட் சேவை முதல்கட்டமாக 200 நகரங்களில் கிடைக்கிறது. இந்த சேவை தங்கள் பகுதிகளில் கிடைக்கிறதா என்று தெரிந்துக் கொள்ள ஜியோமார்ட் வலைதளத்தில் தங்களது பின்கோடை பதிவிட்டால் சேவை குறித்த விவரங்கள் வரும். படிப்படியாக இந்த சேவை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

JioMart-ல் ஆர்டர் செய்யலாம்

பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் மற்றும் பேக்கரி, ஸ்டேபிள்ஸ், தின்பண்டங்கள் மற்றும் பிராண்டட் உணவுகள், பானங்கள், தனிப்பட்ட பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு என 8 பிரிவுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பிரிவை தேர்ந்தெடுக்கலாம். JioMart-ல் இருந்து ஆர்டர் செய்ய, நீங்கள் இணையதளத்தை பயன்படுத்தலாம். அதேபோல் ஆர்டர் 750-க்கும் குறைவாக இருந்தால் டெலிவரி கட்டணமாக 25 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

source: timesnownews.com

Best Mobiles in India

English Summary

Reliance JioMart is now available for delivery service across 200 cities