Home
News

இரவோடு இரவாக குறைக்கப்பட்ட டேட்டா நன்மை.. முக்கிய Jio ரீசார்ஜ்ஜில் திடீர் மாற்றம்.. இனிமேல்?

ரிலையன்ஸ் ஜியோ (Relaince Jio) சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் முக்கியமான திட்டமொன்றின் டேட்டா (Data) நன்மை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. அதென்ன திட்டம்? நேற்றுவரை அது வழங்கிய டேட்டா நன்மை என்ன? இனிமேல் வழங்கப்போகும் டேட்டா நன்மை என்ன? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது, பயனர்களின் திடீர் டேட்டா தேவைகளை பூர்த்தி செய்யும் மிகவும் பிரபலமான ஜியோ டேட்டா பேக் (Jio Data Pack) ஆன ரூ.61-ஐ பற்றித்தான். சரியாக 2 வாரங்களுக்கு முன்னர் இந்த திட்டத்தின் டேட்டா நன்மையானது சத்தமின்றி 10ஜிபி ஆக உயர்த்தப்பட்டது.

குறைக்கப்பட்ட டேட்டா நன்மை.. முக்கிய Jio ரீசார்ஜ்ஜில் திடீர் மாற்றம்!

நினைவூட்டும் வண்ணம், சில நாட்களுக்கு முன்னர் ஜியோவின் ரூ.61 திட்டமானது ஜியோ 5ஜி அப்கிரேட் (Jio 5G upgrade) சலுகையின் கீழ் சேர்க்கப்பட்டது. இதன் விளைவாக ஜியோ 5ஜி கவரேஜின் (Jio 5G Coverage) கீழ் உள்ள வாடிக்கையாளர்கள் - மிகவும் மலிவான விலையில் - ஜியோவின் 5ஜி வெல்கம் ஆஃபரை பெறுவதற்கான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டது.

இதற்காக ரூ.61 திட்டத்தின் டேட்டா நன்மையானது 6ஜிபி-யில் இருந்து 10ஜிபி ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் ஜியோ நிறுவனம் இதுகுறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எல்லாமே சத்தமின்றி தான் நடந்தது. அதே போல மறுபடியும் இரவோடு இரவாக ரூ.61 திட்டத்தின் டேட்டா நன்மையானது 10ஜிபி-யில் இருந்து மீண்டும் 6ஜிபி ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் ​​ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Jio Website) மற்றும் ஜியோ மொபைல் ஆப் (Jio Mobile App) ஆகிய இரண்டிலுமே பிரதிபலிக்கிறது. அதாவது ஜியோ ரூ.61 டேட்டா பேக் ஆனது பழையபடியே 6ஜிபி டேட்டாவுடன் வருகிறது. அறியாதோர்களுக்கு இதுவொரு டேட்டா-ஒன்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Data-only Prepaid Recharge) ஆகும்.

அதாவது இந்த திட்டத்திற்கென எந்த தனியான செல்லுபடியும் இருக்காது. இந்த திட்டத்தின் நன்மைகளானது உங்களுடைய மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். மேலும் 6ஜிபி என்கிற டேட்டா லிமிட்டை (Data Limit) தாண்டிய பிறகு, உங்களுடைய இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) ஆனது 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

இதுபோன்ற மாற்றங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் ஆனது நாடு முழுவதும் புயல் வேகத்தில் பரவி வருகிறது. நம்பினால் நம்புங்கள்! தற்போது வரையிலாக ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க் (Jio True 5G Network) ஆனது இந்தியாவில் உள்ள 5233 நகரங்கள் / ஊர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Silently Reduced The Data Benefit of Rs 61 Recharge Plan and Now Again Offers 6GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X