ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!


ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4கே செட் டாப் பாக்ஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரீவியூ சேவை

அதன்படி பிரீவியூ சேவையில் இருந்து கட்டண இணைப்புகளுக்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ செட் டாப் பாக்ஸ்களை வழங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இது இரண்டு மாதங்களுக்கு முன் ஜியோ அறிவித்த ட்ரிபில் பிளே பிராட்பேண்ட் சலுகைகளின் கீழ் வழங்கப்படுவதாக தெரிகிறது. இதன் மூலம் ஜியோ ஃபைபர் சோதனை நிறைவுற்றதாக ஜியோ தெரிவித்துள்ளது. எனவே ஜியோ ஃபைபர் பிரீவியூ பயன்படுத்தும் பயனர்கள் கட்டண சேவைக்கு மாற வேண்டும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரூ.699-எனும் துவக்க விலை

பின்பு ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரிபில் பிளே சலுகைகள் ரூ.699-எனும் துவக்க விலையில் கிடைக்கின்றன, செட் டாப் பாக்ஸ் மற்றும் கேபிளஸ் டிவி சேவை பற்றி அதிகளவு விவரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து வெளியான தகவல்களில் அனைத்து ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

150 நேரலை டிவி சேனல்களை பார்க்க முடியும்

குறிப்பாக செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கேபிள் டிவி இணைப்பு வைத்திருக்க வேண்டும். தற்சமயம்

வெளிவந்துள்ள தகவல்களில் வாடிக்கையாளர்கள் கேபிளஸ் டிவி இணைப்பின்றி 150 நேரலை டிவி சேனல்களை பார்க்க முடியும்.

அதன்பின்பு ஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோடிவி ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது. இதனால் ஜியோ ஃபைபர் செட் டாப் பாக்ஸ் கொண்டு ஜியோ டிவி செயலியில் உள்ள 650நேரலை டிவி சேனல்களை பார்க்க முடியாது.

மேலும் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோ டிவி பிளஸ் எனும் புதிய செயலி பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இது ஒ.டி.டி தளங்களில் இருக்கும் தகவல்களை இணைக்கிறது.

Most Read Articles

Best Mobiles in India

Have a great day!
Read more...

English Summary

Reliance Jio Set-Top Box Started to Offer more than 150 Live TV Chennels: Read more about this in Tamil GizBot