ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோ நிறுவனம் ரூ.149-ப்ரீபெய்ட் திட்டத்தில் அருமையான சலுகைகைய வழங்கியுள்ளது, இந்த திட்டம்
கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ரூ.149-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 300நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும் 1.5ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ் நாள்தோறும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமாவுக்கும் இலவச அனுகல் கிடைக்கும். தற்போது இந்த ரூ.149-ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 24நாட்கள் ஆகும்.
ஜியோவின் இதே ரூ.149-ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பு ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், 100எஸ்எம்எஸ்,1.5ஜிபி டேட்டா சலுகைகளை 28நாட்கள் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ நிறுவனத்தின் சிறப்பான
திட்டங்களைப் பார்ப்போம்.
ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.222-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 1000 ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 28நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.
அடுத்து ஜியோவின் ரூ.333-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள்,
1000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 56நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன்
ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.
ஜியோவின் ரூ.444-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 1000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ
ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.
ஜியோவின் ரூ.555-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 3000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.