4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!


ரெட்மியின் சமீபத்திய ஸ்மார்ட் டிவி தொடர் 4 கே டிஸ்ப்ளே மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக் குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

Advertisement

ரெட்மி ஸ்மார்ட் டிவி

சியோமியின் துணை நிறுவனம் ரெட்மி சீனாவில் தனது புதிய ஸ்மார்ட் டிவியை ரெட்மி 10 எக்ஸ் ஸ்மார்ட்போன்களோடு அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 10 எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டுத் தேதியின் போது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் தொடர் அறிமுகப்படுத்த உள்ளது.

Advertisement
மூன்று விருப்பங்களில் ஸ்மார்ட் டிவி

புதிய ஸ்மார்ட் டிவி தொடர் 65 அங்குலங்கள் 3299 யுவானுக்கு (தோராயமாக ரூ. 34,987), 55 அங்குலங்கள் 2299 யுவானுக்கு (தோராயமாக ரூ .24,382) மற்றும் 50 அங்குல மாடல் உள்ளிட்ட மூன்று விருப்பங்களில் கிடைக்கிறது. 50 அங்குல மாடலின் விலையை நிறுவனம் தற்போது வரை தெரிவிக்கவில்லை. இருப்பினும், இதன் விலை 2,000 யுவானுக்குக் கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 கே டிஸ்ப்ளே மற்றும் 60 ஹெர்ட்ஸ் ஸ்பீக்கர்

ரெட்மியின் இந்த புது ஸ்மார்ட் டிவி தொடர் 4 கே டிஸ்ப்ளே மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது MEMC தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் தொடரில் நான்கு 12.5W ஸ்பீக்கர்கள் மற்றும் நான்கு ட்வீட்டர்கள் உட்பட எட்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இது டால்பி ஆடியோ மற்றும் சரவுண்ட் ஒலி ஆதரவை தருகிறது கொண்டுள்ளது.

2 ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு

ஸ்மார்ட் டிவிகளில் குவாட் கோர் டெக்ஸ் ஏ 73 செயலி மற்றும் 2 ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு உள்ளது. ஸ்மார்ட் டிவி சியோமியின் பேட்ச்வாலில் இயங்குகிறது, மேலும் இது ஆண்ட்ராய்டு ஆதரவோடு இயக்கப்படுகிறது.

புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி

இதற்கிடையில் சீனாவில் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல் விரைவில் அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்புடுகிறது, பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

4கே எச்டிஆர் டிஸ்பிளே

ரெட்மி நிறுவனத்தின் புதிய 98-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே எச்டிஆர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல். புதிய 98-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் மாடல் ஆனது MEMC இயக்க தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது,பின்பு எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் டைனமிக் பின்னொளியுடன் 178 டிகிரி கோணத்துடன் காட்சி அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

98-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி

98-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் சாதனத்தில் 1.9ஜிகாஹெர்ட்ஸ் அம்லோஜிக் டி972 குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி31 ஜிபியு ஆதரவு உள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ்

இந்த ஸ்மார்ட் டிவியில் வைஃபை 802.11 ஏசி ( (2.4GHz / 5GHz), புளூடூத் 4.2, 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், எஸ் /பி.டி.ஐ.எஃப் மற்றும் ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் மாடலின் விலை 19999 யுவான் ஆக உள்ளது, இந்திய மதிப்பில் ரூ.2,15,400-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English Summary

Redmi X smart tv come with 4K display along with 60Hz refresh rate