அவதாருக்கு சவால் விடும் 2.o படக்காட்சிகள்.!


ரஜினி படம் என்றால் அது இந்தியாவுக்கே தீபாவளி தான். ரஜியின் ஸ்டைலும் அவர் நடிக்கும் காட்சிகளும் திரைக்கு சென்று பார்த்தால் தான் தெரியும். அதில் எந்த அளவுக்கு மெருகேறி நடித்து இருப்பார் என்று. சிவாஜி, எந்திரன் படங்களிலும் பல்வேறு விஷுவல்காட்சிளும் சங்கரின் கைவண்ணத்தால் சக்கை போடு போட்டுள்ளது.

இன்று பிரபலம் அன்று..?

மேலும் சங்கர் படம் என்றாலே எப்போதும் தொழில் நுட்பம் சார்ந்த ஹாலிவுட் என்று கூறுவோம். ஆனால் தற்போது உருவாகியுள்ள 2.o படத்தை ஹாலிவுட்டே தயாரித்து இருப்பது போன்று உள்ளது. இந்த படம் இந்தியாவிலேயே தயாராகி உள்ளது என்றால் அது சங்கரின் 2.o தான்.

மேலும் ரஜினிக்கு ஒரு மவுசு இருந்தாலும், சங்கரும் ரஜினியும் சேர்ந்து கலவை எப்பதும் ஹாலிவுட்டையும் அதிரவிட்டுள்ளது. தற்போது 3டியில் உருவாக்கிய காட்சிகள் அவதார் படத்திற்கும் சாவில் விடுவதாக அமைந்துள்ளது எனலாம்.

எந்திரன் தொடர்ச்சி:

ரஜினி நடிப்பில் உருவான எந்திரன் படத்தின் தொடர்ச்சியே 2.o ஆகும். இந்த படத்தின் முக்கிய கதா பாத்திரமாக ரஜினி, எமிஜாக்ஷன், அக்ஷய் குமார் ஆகியோர் உள்ளனர்.

விரைவில் டீசர் வெளியாகும்:

2.o படத்திற்கு இசை அமைப்பாளர் ஏஆர் ரகுமான். சங்கர் இயக்கியுள்ளார். இலங்கையை சேர்ந்த நிறுவனமான லைக்கா தயாரித்துள்ளது. இந்தப் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தயாராகியுள்ளது. 2.o படத்தின் டீசர் இன்னும் சில நாட்களில் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

15 மொழிகளில் வருகின்றது:

2.o படம் 400 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் உலகம் முழுக்க 15 மொழிகளில் வெளியாக இருக்கின்றது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக 3டி தொழில் நுட்பத்தில் தயாராகும் படம் 2.o ஆகும்.

கிராப்பிக்ஸ் காட்சிகள்:

2.o படத்தின் காட்சிகள் அனைத்தும் அவதார் படத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் தலைசிறந்த வெளிநாட்டு வல்லுநர்கள் , விஷூவல் எப்பெக்ட்ஸ் காட்சிகளுக்கும் திரை காட்சிகளுக்கும் பிரமிப்பு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

3 டி தொழில் நுட்பம்:

ஹாலிவுட்களிலும் பெரும்பாலும் 2யில் படம் எடுக்கப்பட்டு பிறகு 3டிக்கு மாற்றப்படுவது என்பது இயல்பாக இருந்து வருகின்றது. ஆனால் தற்போது முதல் முறையாக இந்தியாவில் 3 டியில் நவீன தொழில் நுட்ப கேமராவை பயன்படுத்தி நேரடியாக உருவாக்கப்பட்டுள்ளது.

அவதார் காட்சிகள்:

அவதார் படம் ஹாலிவுட்டில் பல்வேறு காட்சிகளையும் தத்ரூபமாக காட்டியது. இது உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் மத்தயில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் காட்சிகள் கண் நடப்பது போன்றும் உணர்வு பூர்வமாக இருந்தன. இதை ஜேம்ஸ் கேமரூன் கண்டுபிடித்த கேமராவிலேயே படம் ஆக்கப்பட்டது.

உணர்வுகளை பிரதிபலிக்கும் காட்சி:

2.0 படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் அவதார் படத்திற்கு இணையாகவும், அதில் உள்ள உணர்வுகளையும் கிராப்பிஸ்காட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளது போன்றே இந்த படத்திலும் வருகின்றது. தொழில் நுட்ப ரீதியாக இருந்தாலும், கிராப்பிக்ஸ் காட்சியாக இருந்தாலும் நேரில் நடப்பது போன்ற பரிமானத்தை நாம் உணரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காட்சிகள் அவதார் படத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதில் ஐமில்லை.

உலகையே திரும்பி பார்க்க வைக்கும்:

இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாமல், இந்தியாவில் சினிமா பிரியர்களுக்கும் மட்டும் அல்லாமல், உலகம் முழுக்க உள்ள திரைப்பட ரசிர்களையும் இந்த 2.0 திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் சந்தேம் இல்லை.


Read More About: news smartphone technology india
Have a great day!
Read more...

English Summary

Rajnikanths 2.o 3D movie challenges Avatar Hollywood movie : Read more about this in Tamil GizBot