இஸ்ரோ பூமியை கண்காணிக்க திட்டம்: நாளை விண்ணில் ஏவப்படும் ராக்கெட்- நேரில் பார்க்க அரிய வாய்ப்பு


பிஸ்.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்டில் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோளும் அனுப்பப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட்டானது எக்ஸ் எல் வகையின் 21 ஆவது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாய்ந்த 74 ஆவது ராக்கெட் என்ற பெருமையை பெற்றது.

Advertisement

கார்ட்டோசாட்-3 எதற்கு

கார்ட்டோசாட்-3 செயற்கைகோளானது பூமியை மிக துல்லியமாக படம் பிடிக்கும். இந்த செயற்கை கோளானது 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த கார்ட்டோசாட்-3 பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மிக துல்லியமாக படம் பிடித்து அனுப்பும்.

Advertisement
பெரிதளவு பயன்பெறும் ராணுவம்

இந்த செயற்கை கோள் ராணுவ அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயற்கைகோளின் மூலம் பூமியை துல்லியமாக படம் பிடிப்பதன் மூலம், எதிரிகளின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள், தீவிரவாதிகள் பதுங்கும் இடங்கள், ஆயுதக்கிடங்கு உள்ளிட்டவைகள் எளிதாக கண்டறியமுடியும்.

ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!

வெளிநாட்டு செயற்கைகோள்

விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் இஸ்ரோ வரலாற்றில் ஒரே ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கு 3 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவுவது இதுவே முதன்முறை ஆகும். ரிசாட் வரிசை செயற்கைகோளுடன் ஜப்பான், லக்சம்பர்க் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் 10 செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது.

இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி:

கார்ட்டோசாட்-3 இந்தியாவின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட விண்கலம் எனவும் இதுவரை இஸ்ரோவால் கட்டமைக்கப்பட்டதிலேயே மிகவும் சிக்கலான மற்றும் மேம்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் இதுவென இஸ்ரோ தலைவர் சிவன் கூறி மகிழ்ந்தார்.

உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?

ரிசாட்-2பிஆர்1 தயாரித்த இஸ்ரோ

இஸ்ரோ நிறுவனம் பூமியை கண்காணிப்பதற்காக ‘ரிசாட்-2பிஆர்1' என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. ரிசாட்-2பிஆர்1, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் நாளை மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

கவுண்ட்டவுன் ஸ்டார்ட்

ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக் கட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது.

வெளிநாட்டு செயற்கைகோள்கள்

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கை கோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.

மக்கள் பார்வையிடலாம்

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ஆன்-லைன் முகவரியில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English Summary

Plan to track Earth: ISRO Set to Launch RISAT-2BR1 Satellite on tomorrow