RBI புது லிமிட்! இனி ரூ.25000 லிமிட்.. பேங்க் அக்கவுண்ட், UPI, கார்டுக்கு வந்தது புது ரூல்ஸ்.. எந்த பேமெண்ட்?
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களுக்கு ரூ.25,000 வரம்பை கொண்டுவந்துள்ளது. இந்த வரம்பு யாருக்கெல்லாம் பொருந்தும்?
இது ஒட்டுமொத்த பேங்க் அக்கவுண்ட் கஸ்டமர்களுக்கும் பொருந்தாது. பிபிஐ (PPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (Prepaid Payment Instrument) பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். ப்ரீபெய்ட் கார்டுகள் (Prepaid Cards) மற்றும் வாலெட் (Wallet) வழியாக பரிவர்த்தனைகளை செய்யும்போது இந்த விதிகள் பொருந்தும்.

ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் வழியாக பேமெண்ட்களை செய்தால், மாதத்துக்கு ரூ.2 லட்சம் வரம்பாக இருக்கிறது. இது பர்சன்-டு-பர்சன் (Person To Person) மற்றும் பர்சன்-டு-மெர்ச்சன்ட் (Person To Merchant) ஆகிய பேமெண்ட்களுக்கு பொருந்தும். அதுவே பர்சன்-டு-பர்ஷன் பரிவர்த்தனையில் அதிகபட்சம் ரூ.25,000 மாதாந்திர வரம்பாக இருக்கிறது.
ஆகவே, ரூ.1,75,000 வரையில் பர்சன்-டு-மெர்ச்சன்ட் பேமெண்ட்களை செய்து கொள்ளலாம். இது பிபிஐ வழியாக பேங்க் அக்கவுண்ட்களுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்படும் தொகையாக இருந்தாலும் பொருந்தும், பிபிஐகளுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்படும் தொகையாக இருந்தாலும் பொருந்துகிறது. புதிதாக கேஷ் லோடிங் செய்தால் ரூ.10,000ஆக லிமிட் இருக்கிறது.
அதாவது, பேங்க் கஸ்டமர்களிடம் இருந்து குறைந்தபட்ச விவரங்களை பெற்று சிறிய பிபிஐ (Small PPI) வழங்க அனுமதி கொடுக்கப்படுகிறது. இது வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதற்கு ரூ.10,000ஆக மாதாந்திர லிமிட் இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதை ஃபுல் கேஒய்சி பிபிஐ (Full KYC PPI) ஆக மாற்றிக்கொள்ள அனுமதி கொடுக்கப்படும்.
இப்படி ஃபுல் கேஒய்சி பிபிஐ ஆக மாற்றப்பட்டால், மாதாந்திர லிமிட் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். இது பர்சன்-டு-பர்சன் (Person To Person) மற்றும் பர்சன்-டு-மெர்ச்சன்ட் (Person To Merchant) ஆகிய பேமெண்ட்களுக்கு பொருந்தும். பர்சன்-டு-பர்ஷன் பரிவர்த்தனைக்கு ரூ.25,000 லிமிட்டாக இருக்கும். ஒரு பிபிஐ கிப்டின் (PPI Gift) அதிகபட்ச மதிப்பு ரூ. 10,000 ஆக இருக்கும்.
இது ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இதை ரொக்கமாக எடுப்பதற்கோ அல்லது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு (P2P) பரிமாற்றம் செய்வதற்கோ அனுமதிக்கப்படாது. டிரான்சிஸ்ட் பிபிஐ (Transit PPI) மீதான விதிகளை பார்க்கையில், நிலுவையில் உள்ள தொகை, எந்த நேரத்திலும் ரூ. 3,000 வரம்பை தாண்டக் கூடாது. இதில் பணத்தை எடுத்தல், ரீபண்ட் கோருதல் கிடையாது.
அதேபோல மாற்றுதலுக்கு அனுமதி கிடையாது. இது இந்தியாவில் இருக்கும் பேங்க் கஸ்டமர்களுக்கு பொருந்தும். ஆகவே, வெளிநாட்டு பயணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRIs) பிபிஐ லிமிட்டில் மாற்றம் இருக்கிறது. யுபிஐ ஒன் வேர்ல்டு (UPI One World) லிமிட்டுக்கும் இது பொருந்தும். இதற்காக பாஸ்போர்ட் மற்றும் விசா நேரடியாக வெரிபிகேஷன் செய்யப்படும்.
பிறகே பிபிஐ வழியாக பரிவர்த்தனைகளை செய்ய முடியும். அந்நிய செலாவணிக்கு ஈடாக வழங்கப்படும் இந்த பிபிஐகளுக்கு மாதத்துக்கு ரூ.5 லட்சம் வரம்பாக இருக்கிறது. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்களின் இ-மேண்டேட் (e-mandate) செய்யப்பட்டு ஆட்டோ-டெபிட் (Auto-Debit) செய்யப்படும் தொகைகளிலும் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.
ஆகவே, இ-மேண்டேட் செய்யப்பட்ட ரூ.15,000 வரையிலான பேமண்ட்களுக்கு மாதாமாதம் ஒடிபி (OTP) தேவையில்லை. ஆட்டோ டெபிட்டில் பணம் பரிமாற்றம் செய்யப்படும். ஆனால், பணத்தை டெபிட் செய்வதற்கு முன்பும், பணத்தை எடுத்த பிறகும் சம்பந்தப்பட்ட சேவை வழங்குநர்களிடம் இருந்து எஸ்எம்எஸ்கள், ஈமெயில்கள் வழியாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications