புதிய கூகுள் அக்கவுண்ட்.. 15ஜிபி ஸ்டோரேஜ் ரூல்ஸ்.. இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் போட்டோஸ் போன்ற சேவைகளை நாடு முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஆதார் (Aadhaar) கார்டு, பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட் வரையில் இந்த ஜிமெயில் (Gmail) பயன்படுகிறது. அதேபோல் மாணவர்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஜிமெயில் கணக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக கூகுள் கணக்கைத் தொடங்கும் பயனர்கள் தங்களுடைய மொபைல் எண்ணை இணைக்காவிட்டால் 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் இனி கிடைக்காது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் மேப், கூகுள் போட்டோஸ் என கூகுளின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்தக் கூகுள் கணக்கு தேவைப்படுகிறது.

எனவே அவ்வாறு தொடங்கப்படும் கூகுள் கணக்குகளில் (Google Account) இதுவரை 15ஜிபி இலவச சேமிப்பகம் (ஸ்டோரேஜ்) வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அதிகமாக ஸ்டோரேஜ் தேவைப்படும் பயனர்களுக்குப் பணம் செலுத்திப் பயன்படுத்திக்கொள்ளும் நடைமுறையும் தற்போது இருக்கிறது. ஆப்பிள் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் கூகுள் இலவசமாக அதிக ஸ்டோரேஜ் வழங்குவதால் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் கூகுளில் இலவச ஸ்டோரேஜ்-க்கு சில கட்டுப்பாடுகள் வர உள்ளன. அதன்படி கூகுள் கணக்கைத் தொடங்கும்போது உங்களது மொபைல் எண்ணை உள்ளிடாவிட்டால் அல்லது இணைக்காவிட்டால் 15ஜிபிக்கு பதிலாக 5ஜி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போது கூகுள் (Google) இதனை சோதனை முறையில் செய்து வருவதாக ரெடிட் தளத்தில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாகக் கூகுள் கணக்கைத் தொடங்கும்போது மொபைல் எண்ணை இணைக்காதவர்களுக்கு 5ஜிபியும் மொபைல் எண்ணை இணைத்தால் 15ஜிபியும் வழங்கும் சோதனையை சில பகுதிகள் சோதனை முறையில் அமல்படுத்தியுள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் இந்த புதிய விதிமுறை பழைய கணக்குகளுக்குப் பொருந்தாது என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே கூகுள் கணக்கு தொடங்கியவர்களுக்குப் பாதிப்பு இருக்காது என்றே சொல்லப்படுகிறது. மேலும் பயனர்களுக்குத் தொடர்ந்து உயர்தர ஸ்டோரேஜ் சேவையை வழங்குவதோடு, கூகுள் கணக்கின் பாதுகாப்பு, தரவு மீட்பு வழிமுறைகளை மேம்படுத்தும் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு ஜிமெயில் சேவையில் சில ஏஐ அம்சங்கள் கொண்டுவரப்பட்டது. அதாவது ஜிமெயில் (Gmail) தளத்தில் Help Me Write என்ற என்ற அம்சம் கொண்டுவரப்பட்டது. இது நமக்கு மெயில் எழுதும் சிரமத்தைக் குறைக்கும். பயனர்கள் டைப் செய்யும்போதே ஜிமெயிலில் இருக்கும் ஏஐ அம்சம் ஆனது வாக்கியங்களைப் பரிந்துரைக்கும். அதுவும் இந்த அம்சம் வாக்கியங்களைச் சரி செய்யும் அல்லது முழு மெயிலை கூட டைப் செய்து கொடுக்கும்.
இதுதவிர உங்களின் ஸ்டைலை புரிந்து கொண்டு, நீங்கள் டைப் செய்வது போலவே ஒரு மெயிலை ரெடி செய்து கொடுக்கும். அதாவது ஒரே மாதிரியான மெயிலாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மெயில் என்பதைப் போல இருக்கும். பின்பு அந்த வெர்ஷனை கூட நீங்கள் படித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். குறிப்பாக ஜிமெயில் சேவையில் வந்துள்ள இந்த ஏஐ அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications