ஜியோ 2-வது ஆண்டுவிழா கொண்டாட்டம்: வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர்.!


ஜியோ நிறுவனம் கடந்த வாரம் தந்து இரண்டாம் வெற்றி ஆண்டில் கால்பதித்துள்ளது. இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தை தன பயனர்களுடன் கொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளைத் தாராளமாய் வழங்கிவருகிறது.

இந்திய ஜியோ பயனர்களுக்கு கொண்டாட்டத்தின் முதல் சலுகையாக 2ஜிபி இலவச டேட்டா சேவையை ஐந்து நாட்களுக்கு வழங்கியது, பின்னர் ஜியோ காட்பரி டெய்ரி மில்க் சலுகை என்ற பெயரில் காட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் மூலம் அனைத்து ஜியோ பயனர்களுக்கும் இலவசமாக 1ஜிபி டேட்டா வழங்கியது.

ஜியோ கொண்டாட்ட சலுகை

இப்போது, ஜியோ நிறுவனம் தனது கொண்டாட்டத்தின் அடுத்த சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ பயனர்களுக்கு போன்பே மூலம் உடனடி கேஷ்பேக் ஆக ரூ.50 ஒவ்வொரு ரூ.300 மேலான ஜியோ ரீசார்ஜ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.50 உடனடி தள்ளுபடி வவுச்சர்கள் அனைத்து ஜியோ சந்தாதார்களுக்கும் அவர்களது கணக்கில் கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரீசார்ஜ் பிளான்

உங்களின் சிறந்த ஜியோ ரீசார்ஜ் பிளான் ரூ.100 விலை குறைப்புடன் வழங்கப்படுகிறது. இந்தக் கொண்டாட்ட சலுகையைப் பயனர்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றும் இந்தச் சலுகை வாய்ப்பு செப்டம்பர் 21 வரை மட்டுமே கிடைக்கும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

போன்பே & ஜியோ வலைத்தளம்

இந்தச் சலுகை ரூ.349 ரீசார்ஜ் திட்டத்தில் இருந்து துவங்கி ரூ.9,999 ரீசார்ஜ் திட்டம் வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சலுகை உங்களுக்குக் கிடைப்பதற்கு, நீங்கள் போன்பே வழி பரிவர்த்தனை பெமென்ட் முறையைத் தேர்வு செய்ய வேண்டும். போன்பே இல் இனைக்கப்பட்டுள்ள உங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது போன்பே வாலட் மூலம் இந்தச் சலுகையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஜியோ பயனர்கள் ஜியோ செயலி(MyJio app) அல்லது ஜியோ வலைத்தளம்(Jio.com) மூலம் இந்தக் கொண்டாட்ட சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

கேஷ்பேக்

இந்தச் சலுகையில் நீங்கள் செய்யும் பரிவர்த்தனைக்கு ரூ.50 உடனடி கேஷ்பேக் உடனுக்குடன் உங்கள் ஜியோ கணக்கில் தரப்படும் மற்றும் உங்களுக்கான உடனடி போன்பே கேஷ்பேக் ரூ.50, 24 மணி நேரத்திற்குள் உங்கள் போன்பே கணக்கில் நிச்சயம் வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகை குறிப்பிட்ட காலமான செப்டம்பர் 21 வரை மட்டுமே என்றும் அறிவித்திருக்கிறது.

42ஜிபி டேட்டா

ஜியோ ரூ.399 திட்டம், கொண்டாட்ட சலுகையை முன்னிட்டு வெறும் ரூ.299 க்கு 3 மாத வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. அதன்படி அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 42ஜிபி டேட்டா என மாதத்திற்கு வெறும் ரூ.100 என்ற கட்டண விதத்தில் ஜியோ பயனர்களுக்கு இந்த சலுகை தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Read More About: Mobile news scitech tech news
Have a great day!
Read more...

English Summary

Jio Giving Rs. 50 Cashback on Recharges Above Rs. 300 on PhonePe Transactions : Read more about this in Tamil GizBot