அரைசதம் அடித்த இஸ்ரோ: வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்- வீடியோ


பிஸ்.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்டில் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோளும் அனுப்பப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட்டானது எக்ஸ் எல் வகையின் 21 ஆவது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாய்ந்த 74 ஆவது ராக்கெட் என்ற பெருமையை பெற்றது.

Advertisement

கார்ட்டோசாட்-3 எதற்கு

கார்ட்டோசாட்-3 செயற்கைகோளானது பூமியை மிக துல்லியமாக படம் பிடிக்கும். இந்த செயற்கை கோளானது 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த கார்ட்டோசாட்-3 பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மிக துல்லியமாக படம் பிடித்து அனுப்பும்.

Advertisement
பெரிதளவு பயன்பெறும் ராணுவம்

இந்த செயற்கை கோள் ராணுவ அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயற்கைகோளின் மூலம் பூமியை துல்லியமாக படம் பிடிப்பதன் மூலம், எதிரிகளின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள், தீவிரவாதிகள் பதுங்கும் இடங்கள், ஆயுதக்கிடங்கு உள்ளிட்டவைகள் எளிதாக கண்டறியமுடியும்.

நீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி

வெளிநாட்டு செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்

இஸ்ரோ வரலாற்றில் ஒரே ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கு 3 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவுவது இதுவே முதன்முறை ஆகும். ரிசாட் வரிசை செயற்கைகோளுடன் ஜப்பான், லக்சம்பர்க் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் 10 செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது.

ரிசாட்-2பிஆர்1 தயாரித்த இஸ்ரோ

இஸ்ரோ நிறுவனம் பூமியை கண்காணிப்பதற்காக ‘ரிசாட்-2பிஆர்1' என்ற செயற்கைகோளை தயாரித்து விண்ணில் செலுத்தியது. ரிசாட்-2பிஆர்1, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் இன்று மாலை 3.25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்படும் 50-வது பிஎஸ்எல்வி ரக ராக்கெட் வகை இதுவாகும்.

அடடே., வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கா: சேமிப்புக்கான சிறந்த வழி

வெளிநாட்டு செயற்கைகோள்கள்

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கை கோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்பட்டன

Best Mobiles in India

English Summary

Isro to launch PSLV-C48 with spy satellite and 9 others