ஐபோன் 6, நெக்சஸ் 6 விலை குறைப்பு..!!
தொழில்நுட்ப சந்தையில் எந்த பொருள் விலை குறைக்கப்பட்டாலும் புதிதாக கருவிகள் வெளியாவதையே மறைமுகமாக குறிக்கும். செப்டம்பர் மாதம் துவங்கியிருப்பதோடு ஆப்பிள் கருவிகளின் விலை குறைபக்கப்பட்டுள்ளது, அந்நிறுவனத்தின் புதிய கருவிகளின் வெளியீட்டினை மேலும் உறுதி செய்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.
இது தான் எதிர்காலம் அடித்து கூறும் ஹாலிவுட்..!!
எதுவானாலும் விலை குறைந்தால் தான் சிலவற்றை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டிருப்போருக்கு இந்த சலுகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் விலை குறைக்கப்பட்ட சில கருவிகளின் பட்டியலை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

லெனோவோ யோகா 500
பேடிஎம் தளத்தில் லெனோவோ யோகா 500 14 இன்ச் லாப்டாப் கருவியின் விலை ரூ.60,600 மட்டுமே, LAP18 எனும் பிரத்யேக கோடினை பயன்படுத்தி இந்த கருவியை சுமார் 18 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும்.

ஐபோன் 6 16 ஜிபி
ஆப்பிள் ஐபோன் 6 16 ஜிபியின் விலை ரூ.53,500 ஆக இருந்தது, ஆனால் பேடிஎம் தளத்தில் இந்த கருவியினை சுமார் ரூ.46,342க்கு வாங்க முடியும்

நெக்சஸ் 6
ப்ளிப்கார்ட் தளத்தின் புதிய எக்ஸ்சேஜ் சலுகையில் புதிய நெக்சஸ் 6 கருவியினை குறைந்த விலையாக ரூ.19,999க்கு பெற முடியும்.

ஆப்பிள் லைட்னிங் யுஎஸ்பி கேபிள்
ரூ.2300 மதிப்புடைய ஆப்பிள் யுஎஸ்பி கேபிள் பேடிஎம் தளத்தில் ACC30 கோடினை பயன்படுத்தி 30 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும்.

ஹார்டு டிரைவ்
ரூ.6610 விலையுடைய டபிள்யுடி எலிமென்ட்ஸ் போர்டபிள் ஹார்டு டிரைவ் கருவியினை ரூ.4,107க்கு பெறலாம்.

ஆப்பிள் ஏர்போர்ட் டைம் கேப்சூல்
புதிய ஆப்பிள் ஏர்போர்ட் டைம் 2டிபி கேப்சூல் கருவியினை SAVE2500 கோடினை பயன்படுத்தி அதிகபட்சம் ரூ.2500 வரை கேஷ்பேக் பெற முடியும்.

முகநூல்
இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications
