சந்திராயன் 2 செயல்படாததற்கு வடகொரியா ஹாக்கர்கள் காரணமா? உண்மை இதுதான்!


நம் நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த செப்டம்பர் மாதம் சந்திராயன் 2 விண்கலத்தை நிலவிற்கு செலுத்த தயாராகிக்கொண்டு இருந்த சமயத்தில் வடகொரியா ஹாக்கர்கள் சிலர் இஸ்ரோ நிறுவனத்தின் நெட்ஒர்க்கை தாக்க முற்பட்டதாக டெய்லிமெயில் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

வடகொரியா ஹாக்கர்கள் தாக்குதல்

இஸ்ரோவுடன் சேர்த்து மேலும் நான்கு அரசு நிறுவனத்தின் மேல் வடகொரியா ஹாக்கர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், இந்த தாக்குதலினால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் திட்டம் எந்த விதத்திலும் பாதிக்க படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement
ஸ்பேம் ஈமெயில் மூலம் தாக்குதல்

வடகொரியாவில் இருந்த வந்த ஸ்பேம் ஈமெயில்-கள் மூலமாக இந்த மல்வார் இஸ்ரோ வலைத்தளத்திற்குள் வந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பினான்சியல் டைம்ஸ்-ன் அறிக்கையின் மூலம் செப்டம்பர் மாதத்திலே வடகொரியா மூலம் இந்த தாக்குதல் நடக்க நேரலாம் என்று இஸ்ரோவிற்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

YAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.!

இந்திய அணுசக்தி கழகமும் தாக்கப்பட்டதா?

இந்தியாவை சேர்ந்த 18 மாநிலங்களில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி கூடங்களில் இந்த மல்வார் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் உள்ள இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) கண்டறியப்பட்ட இந்த மல்வார் மூலம் இந்த தாக்குதல் வடகொரியாவின் டி-ட்ராக்கர் தான் நிகழ்த்தியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு இல்லை

NPCIL-ல் உள்ள நிர்வாக பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் கணினியில் இந்த மல்வார் உள்ளதால் பயப்படும் அளவிற்கு பாதிப்பு இல்லை என்றும் பாதிக்கப்பட்ட அந்த கணினி பிரித்துவைக்க பட்டுவிட்டது என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

டி-ட்ராக்கர்

டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய கஸ்பிரஸ்கய் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர் கான்ஸ்டான்டின் ஜிகோவ், டி-ட்ராக்கர் போன்ற மல்வார்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் கொடுத்துக்கொண்டே இருக்கும் என்றும் ஒருமுறை இவை செயல்பற்றிக்கு வந்துவிட்டால் அது அளிக்கப்பட்டுவிட்டது என்று நினைத்தாலும் அது வேறு விதத்தில் தனது தாக்குதலை தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கு காரணம்

மேலும் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது இஸ்ரோவுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கு தென்துருவதில் அது இருந்ததே காரணம் என்றும், ஹேக்கர்களின் சதி வேலை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலிற்கும் அந்நிகழ்விற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

Best Mobiles in India

English Summary

Indian Space Research Organisation May have Targeted By North Korean Hackers : Read more about this in Tamil GizBot