அதிவேக வளர்ச்சியில் இந்தியா..!!
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இந்தியாவின் இண்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை 52 மில்லியன் அதிகரித்து ஜூன் 30 2015 வரையிலான மொத்த எண்ணிக்கையை 352 மில்லியனாக உயர்த்தியுள்ளது.
ஜப்பானை ஓரங்கட்டும் இந்தியா..!

இதில் 213 மில்லியன் பேர் தங்களது மொபைல் மூலம் இண்டர்நெட் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் சுமார் 60 சதவீதம் பேர் மொபைல் கருவிகளை கொண்டு இண்டர்நெட் பயன்படுத்தி வருப்பதாக தெரியவந்துள்ளது.
'ரோல்லி கீபோர்டு' : எங்கும் எப்போதும்..!!
அக்டோபர் 2014 ஆம் ஆண்டு 278 மில்லியனாக இருந்த இண்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கையானது 26 சதவீதம் அதிகரித்துள்ளதோடு மொபைல் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் 40 சதவீதம் அதிகரித்திருப்பதாக இந்தியன் இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 மணி நேரம் பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச்..!

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 மில்லியனில் இருந்து 100 மில்லியனாக அதிகரிக்க 10 ஆண்டுகள் ஆனது, ஆனால் 100 மதல் 200 மில்லியனாக அதிகரிக்க 3 ஆண்டுகளே ஆனது, மேலும் ஒரே ஆண்டில் 200 முதல் 300 மில்லியனாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
