youtube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை!


netflix, youtube, amazon prime, hotstar, jio cinema ஆகிய செயலியில் 1 மணி நேரத்திற்கு வீடியோ எந்தெந்த க்வாலிட்டியில் பார்த்தால் எவ்வளவு இணையம் செலவாகும் என்று பார்க்கலாம்.

Advertisement

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பரவல் குறைவாக உள்ள இடத்தில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் தங்களது நேரத்தை செல்போனில்தான் செலவிட்டு வருகின்றனர்.

Advertisement
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, யூடியூப்

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, யூடியூப் என அனைத்திலும் வீடியோ பார்த்து தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இருப்பினும் வீடியோ பார்த்துக் கொண்டே இருப்பதில் திடீரென ஒரு குறுஞ்செய்தி தங்களது மொபைல் டேட்டா 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது என ஒரு மெசேஜ் வரும்.

100% டேட்டா

100% டேட்டா உபயோகித்துவிட்டீர்கள் என ஒரு குறுஞ்செய்தி வந்ததும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறிவிடுவார்கள். எப்படி 100% டேட்டா நிறைவடைந்து விட்டது என்ற கேள்வி தோன்றலாம்.

எந்தெந்த செயலியில் எவ்வளவு ஸ்ட்ரீமிங்

எந்தெந்த செயலியில் எவ்வளவு ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. எந்த க்வாலிட்டியில் வீடியோ பார்த்தால் எத்தனை ஜிபி டேட்டா காலியாகும் என்பது கணக்கிலிட முடியாமல் இருந்தது தற்போது அதுகுறித்து பார்க்கலாம். ஒரு மணிநேரக் கணக்கில் எந்த ஆப் வீடியோ பார்த்தால் எவ்வளவு குறையும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஒரு வினாடியில் 1000 திரைப்படம் டவுன்லோட் செய்யலாம் - புதிய அதிவேக இன்டர்நெட்!

யூடியூப் வீடியோ
  • 2160p: 1 மணி நேரம்- 5.5 ஜிபி முதல் 23.0 ஜிபி டேட்டா வரை
  • 1440p: 1 மணி நேரம்- 2.7 ஜிபி முதல் 08.1 ஜிபி டேட்டா வரை
  • 1080p: 1 மணி நேரம்- 2.5 ஜிபி முதல் 4.1 ஜிபி டேட்டா வரை
  • 720p: 1 மணி நேரம்- 1.2 ஜிபி முதல் 2.7 ஜிபி டேட்டா வரை
  • 480p: 1 மணி நேரம் - 480 ஜிபி முதல் 660 எம்பி டேட்டா வரை
  • 360p: 1 மணி நேரம்- 300 ஜிபி முதல் 450 எம்பி டேட்டா வரை
  • 240p: 1 மணி நேரம்- 180 ஜிபி முதல் 250 எம்பி டேட்டா வரை
  • 144p: 1 மணி நேரம்- 30 ஜிபி முதல் 90 எம்பி டேட்டா வரை
  • ஹாட்ஸ்டார்

    ஹாட்ஸ்டார் வீடியோ பார்ப்பதில் ஒரு மணிநேர கணக்கில் எத்தனை ஜிபி காலியாகும் என பார்க்கலாம்.

    medium (360p): 1 மணி நேரத்திற்கு 249 எம்பி டேட்டா வரை

    Hi (720p): 1 மணி நேரத்திற்கு 639 எம்பி டேட்டா வரை

    Full HD (1080p): 1 மணி நேரத்திற்கு 1.3 ஜிபி டேட்டா வரை

    ஜியோ சினிமா:

    ஜியோ சினிமாவை பொருத்தவரை லோ க்வாலிட்டி வீடியோ பார்க்கும் போது 1 மணி நேரத்திற்கு 0.17 ஜிபி டேட்டா வரை இணையம் காலியாகும் என்றும் மீடியம் க்வாலிட்டி வீடியோ ஸ்டிரீமிங் செய்கையில் ஒரு மணி நேரத்திற்கு 0.51 ஜிபி டேட்டா வரை காலியாகும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஹை க்வாலிட்டி வீடியோ பார்க்கையில் 1 மணி நேரத்திற்கு 1 ஜிபி டேட்டா வரை காலியாகும்.

    நெட்பிளிக்ஸ்

    அதேபோல் நெட்பிளிக்ஸ் வீடியோ பார்க்கையில் 1 மணி நேரத்திற்கு 0.3 ஜிபி டேட்டா என லோ க்வாலிட்டி ஸ்ட்ரீமிங்கில் காலியாகும். மீடியம் க்வாலிட்டி பார்க்கையில் 1 மணி நேரத்திற்கு 0.7 ஜிபி டேட்டா காலியாகும், ஹை க்வாலிட்டி வீடியோவை பொருத்தவரையில் எச்டி 1 மணி நேரத்திற்கு 3 ஜிபி வரை காலியாகும். 4 கே வீடியோ ஸ்ட்ரீமிங் பொருத்தவரையில் அல்ட்ரா ஹெச்டி 1 மணி நேரத்திற்கு 7 ஜிபி டேட்டா வரை காலியாகும்.

    அமேசான் ப்ரைம் வீடியோ

    டேட்டா சேவர் மூலம் வீடியோ பார்க்கையில் 1 மணி நேரத்திற்கு 0.12 ஜிபி டேட்டா வரையிலும், குட் அதாவது இந்த செயலியில் சிறந்த வீடியோ 1 மணி நேரத்திற்கு 0.18 ஜிபி டேட்டா வரையிலும், பெட்டர் அதாவது சிறந்த வீடியோ பார்க்கையில் 1 மணி நேரத்திற்கு 0.72 ஜிபி வரை காலியாகும். அதேபோல் பெஸ்ட் மிகசிறந்த க்வாலிட்டி வீடியோ பார்க்கையில் 1.82 ஜிபி டேட்டா வரை காலியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English Summary

how much data streaming in netflix, youtube, amazon prime consume in 1 hour