விண்ணில் தெரிந்த கடவுளின் கை, புகைப்படம் எடுத்த நாசா..!


அறிவியலும், மதமும் எதிர்ரெதிர் துருவங்கள் என்கிற போதிலும் சில சமயம் இரண்டும் ஒன்றாய் இணைந்து புது விளக்கத்தினை ஏற்படுத்தும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் தான் இந்த 'கடவுளின் கை'..!

'கடவுளின் கை' புகைப்படம் சார்ந்த மேலும் பல விவரங்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புகைப்படம் :

சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒன்று விண்ணில் கை வடிவத்தில் தோன்றிய விண்பொருளை (celestial object) புகைப்படம் எடுத்துள்ளது.

வெடிப்பு :

ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு, அதன் மூலம் வெளியேறிய மாபெரும் மேக பொருட்கள் மூலம் கை போன்ற வடிவம் விண்ணில் உருவாகி உள்ளது.

டெலஸ்கோப் :

அந்த காட்சியை நாசாவின் நுக்லியர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் டெலஸ்கோப் அர்ரே (Nuclear Spectroscopic Telescope Array) புகைப்படம் எடுத்துள்ளது.

எக்ஸ்-கதிர்கள் :

புகைப்படத்தில் உயர் ஆற்றல் எக்ஸ் கதிர்கள் (high-energy X-rays) நீள நிறத்திலும், குறைவான ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்கள் சிகப்பு மற்றும் பச்சை நிறத்திலும்

தெரிகிறது என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.

விளக்கம் :

வெடிப்பில் வெளியான பருப்பொருட்கள் நிஜமாகவே கை போன்ற வடிவத்தை உருவாக்கியதா அல்லது பார்ப்பதற்கு அப்படி தெரிகிறதா என்பது பற்றிய விளக்கம் இல்லை.

வைரல் :

இருப்பினும் விண்ணில் தோன்றிய இந்த உருவம் 'கடவுளின் கை' என்று பெயர் சூட்டப்பட்டு வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

பாரேடொலியா :

மேலும் சிலர் இந்த கடவுளின் கையை (Pareidolia) என்ற உளவியல் நிகழ்வு என்று கூறுகின்றனர்.

பரிச்சயமான உருவம் :

அதாவது சீரற்ற அல்லது தெளிவற்ற காட்சிகளை காணும் போது மனது தானாகவே ஒரு பரிச்சயமான உருவத்தை காணும். அதை தான் பாரேடொலியா (Pareidolia) என்பார்கள்.

காரணம் :

நாம் வானத்தில், நிலவில் அல்லது மேகத்தில் மிருக உருவம், முகம் போன்றவைகளை காண இந்த உளவியல் நிகழ்வு தான் காரணம் ஆகும்.

மேலும் படிக்க :

முதல் முறை 'அழகாக' தெரியும் : இந்தியா - பாக் எல்லை..!

மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்..!

ப்ளூட்டோ : ஒரு விசித்திர உலகம் (புகைப்படங்கள்)..!

அற்புதம் : நாசா செயற்கைகோள் அனுப்பிய புகைப்படம்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

Read More About: nasa space science technology

Have a great day!
Read more...

English Summary

'Hand of God' Spotted by NASA Space Telescope (Photo). Read more about this in Tamil GizBot.