Hacker அட்டூழியம்: இணையத்தில் 5 லட்சம் username, password-களை கசியவிட்டதாக அதிர்ச்சி தகவல்!


ஹேக்கர்கள் இன்று உலகம் பூராவும் பரவிக் கிடக்கின்றனர். அவர்கள் புது புது பாணிகளை கையாண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட வேண்டிய நிலை இருந்து வருகிறது.

Advertisement

5 லட்சம் பேரின் தகவல் வெளியீடு

இணைய பயன்பாட்டுடன் தொடர்புடைய சர்வர்கள், ரவுட்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களின், 5 லட்சம் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை, ஹேக்கர் ஒருவர் கசியவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement
ரிமோட் ஆக்சஸ் அமேசான் ரிங் பெல் கேமரா

இந்த ஹேக்கரின் தாக்குதலுக்கு ரிமோட் ஆக்சஸ் நுட்பத்தில் இயங்கும் அமேசான் ரிங் பெல் கேமரா, ரிங் செக்யூரிட்டி கேமரா உள்ளிட்ட கண்காணிப்பு கேமிராக்களும் தப்பவில்லை.

சர்வர்கள் உள்ளிட்ட இணைய பயன்பாடு

இதனால், பிற ஹேக்கர்கள் உள்ளிட்டோர், எளிதில் மற்றவர்களின், சர்வர்கள் உள்ளிட்ட இணைய பயன்பாட்டுடன் கூடிய சாதனங்களில் உட்புகுந்து, சைபர் தாக்குதல் நடத்த கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரிங் பெல் செக்யூரிட்டி கேமரா

இதையடுத்து, தனது ரிங் பெல் செக்யூரிட்டி கேமரா வாடிக்கையாளர்களிடம், பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டுகளை மாற்றுமாறு, அமேசான் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Best Mobiles in India

English Summary

Hacker leaked 5 lakhs username and password sources said