தேர்தல் ஆணையம்: ஓட்டு இயந்திரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம்.!

குறிப்பாக மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி துவங்கி மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறஇருக்கிறது.


தற்சமயம் தேர்தல் ஆணையம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மக்களவை தேர்தலின் போது ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் ( gps) கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

குறிப்பாக மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி துவங்கி மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.35 லட்சம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன, இந்த தேர்தலில், உபரி இயந்திரங்களையும் சேர்த்து, 39.6 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 17.4 லட்சம் ஒப்புகை சீட்டு
இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கண்டிப்பாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களை தேர்தல் பணியின் போது ஏற்றிச்செலும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு இருத்தல் அவசியம் என தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலின்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சாலையிலும், ஓட்டல் அறையிலும், அரசியல்வாதிகள் சிலரது வீட்டிலும் கண்டெடுக்கப்பட்டதாக செய்து வெளியானது. எனவே இதுபோன்ற முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

தேர்தல் நேரங்களில், உபரி கையிருப்பாக வைக்கப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அதிகாரிகளின் கவனக் குறைவால் காணாமல் போகின்றன. எனவே தான் இந்த முறை உபரி கையிருப்பு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும்
ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், இடங்களை தெளிவாக காட்டும் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Advertisement

English Summary

gps-is-mandatory-in-the-vehicle-which-is-using-for-carrying-voting-machines: Read more about this in Tamil GizBot