2019 ஜனவரி 1-முதல் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அதிரடி.!

ஆன்லைன் நிறுவனங்கள் தங்களிடம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது.


பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்ததுள்ளது மத்திய அரசு, இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் ஆன்லைன் வர்த்தகம் என்பது இந்தியாவில் பன்மடங்கு உயர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும், அதிலும் பிள்ப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அனைவராலும் அடையாளம்
காணும் அளவுக்கு உயர்ந்துள்ளது, பின்பு விற்பனைகளிலும் இந்த இரண்டு நிறுவனங்கள் சாதனை படைத்துள்ளது.

Advertisement

குறிப்பாக அமேசான் மற்றும் பிள்ப்கார்ட் நிறவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், போட்டியாளர்களை ஒழிக்கும் வகையிலும் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது, இந்த முறைக்கு
முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு ஆன்லைன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுபாடுகள் குறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கை என்னவென்று பார்ப்போம்.

கட்டுப்பாடு-1:

ஆன்லைன் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் அனைத்து விற்பனையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை அளிக்க வேண்டும்.

கட்டுப்பாடு-2:

ஆன்லைன் நிறுவனங்கள் தங்களிடம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது.

கட்டுப்பாடு-3:

பின்பு ஒரு விற்பனையாளர் தன்னிடம் உள்ள பொருள்களில் 25சதவீதம் மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்க வேண்டும்.

கட்டுப்பாடு-4:

ஆன்லைன் நிறுவனங்கள், தாங்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொருள் விற்பனை செய்கிறோம் என்பது போன்ற நிலையை ஏற்படுத்தக் கூடாது.

கட்டுப்பாடு-5:

தங்களிடம் மட்டுமே பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த விற்பனையாளரையும் ஆன்லைன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது

கட்டுப்பாடு-6:

சிறப்பு சலுகை மற்றும் கேஷ்பேக் என்ற பெயரில் தள்ளுபடி அளிக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பாரபட்சம் காட்டக் கூடாது.

மத்திய அரசு

மத்திய அரசு கொண்டுவரும் இந்த நடவடிக்கைக்கு ஸ்னாப்டீல் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன, பின்பு அமேசான் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தற்போது தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம்
மேற்கொண்டு சில ஸ்மார்ட்போன் வகைகளை வெளிச்சந்தையில் வர விடாமல் தடுத்து, தங்களிடம் மட்டுமே அது கிடைக்கும் என்று கூறி விற்பனை செய்கின்றன. பின்பு ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில், குறைந்த
எண்ணிக்கையில் மட்டும் ஆன்லைனில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து அது மிக அரிதான பொருள் என்ற நிலையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English Summary

Flipkart, Amazon hit as govt tightens e-commerce norms: Read more about this in Tamil GizBot