Home
News

ஜியோ சேவைகளை புறக்கணிப்போம்: அம்பானி, அதானியை கலங்க வைக்கும் விவசாயிகள் அறிவிப்பு!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் தீர்க்கமாக உள்ளனர். ஆனால், இதை ஏற்க மத்திய அரசு தயாராக இல்லை.

வேளாண் சட்டங்களில் சில திருத்தங்கள்

வேளாண் சட்டங்களில் சில திருத்தங்கள்

அதற்கு பதிலாக வேளாண் சட்டங்களில் சில திருத்தங்களை மட்டும் கொண்டு வர மத்திய அரசு முன்வந்தது. இது தொடர்பான வரைவு அறிக்கை விவசாய சங்க நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த விவசாயிகள், மத்திய அரசின் திருத்தங்களை ஏற்க மறுத்துள்ளனர்.

14ம் தேதி நாடு முழுவதும் போராட்டம்

14ம் தேதி நாடு முழுவதும் போராட்டம்

மேலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் 14ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

வேளான் சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டம்

வேளான் சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டம்

இந்திய வேளான் சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலதிபர்களான அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் வழங்கும் அனைத்து சேவைகளையும் புறக்கணிக்க விவசாயிகள் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

அதானி, அம்பானி தயாரிப்புகள் புறக்கணிப்பு

அதானி, அம்பானி தயாரிப்புகள் புறக்கணிப்பு

டிசம்பர் 14 முதல் நாடு தழுவிய போராட்டத்திற்கு டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் அதானி, அம்பானி தயாரிப்புகளை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். டெல்லியின் அண்டை மாநிலங்களாக இருக்கும் உத்தரகண்ட், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் டெல்லி சாலோ என்ற முழக்கத்தோடு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

பாஜக மாவட்ட தலைமையகத்தில் போராட்டங்கள்

பாஜக மாவட்ட தலைமையகத்தில் போராட்டங்கள்

டிசம்பர் 14 ஆம் தேதிமுதல் பாஜக மாவட்ட தலைமையகத்தில் போராட்டங்கள், அதானி - அம்பானி திட்டங்கள், மால்கள், டோல் பிளாசாக்கள் முன்பு போராட்டங்கள் நடத்த இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். பாரதிய ஜனதாவிற்கு வருவாய் வழங்கும் அதானி திட்டங்கள், மால்கள், டோல் பிளாசாக்கள் ஆகியவைகளை புறக்கணிக்கவும் முற்றுகையிடவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 நிகழ்வு

இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 நிகழ்வு

அதேபோல் தற்போதைய போராட்டங்களுக்கு பிரதானமாக இருப்பது சமூகவலைதளங்களே, அதற்கு இணைய சேவை அளிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஜியோ. இந்தநிலையில் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 நிகழ்வில் மத்திய அரசின் மூலோபாயக் கொள்கையின் அவசியம் குறித்து அம்பானி கூறியதே விவசாய புறக்கணிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ வளர்ச்சி

ரிலையன்ஸ் ஜியோ வளர்ச்சி

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த நாளில் இருந்து தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டிப்போட முடியாமல் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திண்டாடும் அளவிற்கு ரிலையன்ஸ் ஜியோ அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் முதல்முறையாக ரிலையன்ஸ் ஜியோ புறக்கணிப்பு குறித்து விவசாயிகள் போராட்டத்தில் அறிக்கப்பட்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Farmers Leaders Decided to Boycott Of Reliance Jio Sims and All Adani Products
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X