PF கணக்கு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. EPFO ஆணையர் வெளியிட்ட முக்கிய தகவல்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)தொடர்ந்து பல்வேறு புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. அதுவும் இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் PF சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்த தவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் தொழிலாளரின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியும், அதேபோல் நிறுவனத்தின் பங்களிப்பும் சேர்த்து பிஎஃப் கணக்கில் சேமிக்கப்படுகிறது. இந்த தொகை தொடர்ந்து சேர்ந்து வருவதால், பணியாளர் ஓய்வு பெறும் காலத்தில் அது கணிசமான சேமிப்பாக மாறுகிறது. மேலும், பிஎஃப் சேமிப்பிற்கு அரசு நிரந்தரமாக வட்டி வழங்குவதால், முதலீட்டு தொகை காலப்போக்கில் அதிகரிக்கிறது. குறிப்பாக கூட்டு வட்டி (Compound Interest) முறையில் பணம் வளர்வதால், நீண்ட காலத்தில் இது சிறந்த நிதி பாதுகாப்பையும் நல்ல வருமானத்தையும் வழங்குகிறது.

இந்நிலையில் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களுடைய பிஎஃப் இறுதி தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறையை விரைவில் தானியங்கி முறைக்கு மற்ற இருக்கிறார்கள். அதாவது அதாவது Auto Settlement முறைக்கு மாற்ற உள்ளனர். ஆகவே பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் இறுதித் தொகையை எடுப்பதற்கான விண்ணப்பம் செய்யும்போது எந்த வித தாமதமும் இல்லாமல் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு உடனடியாக பணம் சென்றடையும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் தலைவர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதுவும் இப்போது பிஎஃப் கணக்கிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரையில் பகுதி அளவு தொகை எடுக்க மட்டுமே ஆட்டோ செட்டில்மெண்ட் எனப்படும் தானியங்கி முறை செயல்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக இந்த ஆட்டோ செட்டில்மெண்ட் பிரிவின் கீழ் நாம் விண்ணப்பம் செய்த தொகையானது நம் அக்கவுண்டிற்கு வந்துவிடுகிறது. இந்த வேகமான வசதியை இனி பிஎஃப் கணக்கை முழுமையாக முடித்து பணத்தை பெரும் இறுதி தீர்வு முறைக்கும் விரிவுபடுத்த இபிஎஃப்ஓ அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.
இதுதவிர பணியாளர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பழைய பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை புதிய கணக்குக்கு மாற்ற இனி தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அதாவது பழைய கணக்கில் இருக்கும் தொகை தானாகவே புதிய கணக்குக்கு மாற்றப்படும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களில் கீழ் இபிஎஃப்ஓ தொடர்பான புதிய விதிகள் விரைவில் வெளியிடப்படும் என ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆகவே பிஎஃப் சந்தாதாரர்கள் இனி தங்களுடைய சேமிப்பு தொகையை பெறுவதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் குறைய உள்ளது. ஓய்வு பெறும் நேரத்திலோ அல்லது இனி வேலைக்கு செல்ல போவதில்லை என்பதற்கான சூழல்களிலோ, முழு பிஎஃப் தொகையைப் பெற விண்ணப்பித்தால், அது விரைவாக செயல்படுத்தப்படும். குறிப்பாக ஆட்டோ செட்டில்மெண்ட் வசதி மூலம், தேவையான சரிபார்ப்புகள் முடிந்தவுடன் பணம் நேரடியாகப் பயனாளியின் வங்கி கணக்கில் சீக்கிரமாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் மேலாக, பிஎஃப் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தை அவசர தேவைகளுக்காக எளிதாக பயன்படுத்த புதிய வசதிகளும் அறிமுகமாக உள்ளன. அதன்படி, யுபிஐ (UPI) சேவையின் மூலம் நேரடியாக பணத்தைப் பெறுவது மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வழியாகத் தேவையான தொகையை எடுத்துக்கொள்ளும் வசதிகள் EPFO 3.0 திட்டத்தின் கீழ் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கின்றன.இந்த மாற்றங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications