Home
News

உஷாரய்யா உஷாரு.. ATM வழியாக PF பணம் எடுக்கும் புது வசதிக்கு பின்னால் இப்படி ஒரு சிக்கல்-ஆ?

பிஎப் (PF), பென்ஷன் (Pension), இபிஎப்ஓ (EPFO) மெம்பர்கள் என அனைவருடைய கண்களும் இபிஎப்ஓ 3.0 (EPFO ​​3.0) அறிமுகத்தின் மீது தான் இருக்கிறது. ஏனென்றால் முன்மொழியப்பட்டுள்ள இபிஎப்ஓ 3.0 அமைப்பின் கீழ், இபிஎப்ஓ என்கிற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) ஆனது முற்றிலும் காகிதமில்லா செயல்முறை மற்றும் பிஎப் பணத்தை ஏடிஎம் வழியாக எடுக்கும் வசதி உள்ளிட்ட பெரும் மாற்றங்களை கொண்டு வரவுள்ளது.

இந்த நடவடிக்கைகள் இபிஎப்ஓ ​​அமைப்பை நவீனமயமாக்குவதில் ஒரு பெரிய முன்னேற்றத்தை குறிக்கும் அதே வேளையில், பெரிய தொகையை எடுப்பது இபிஎஸ் (EPS) என்கிற ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் (Employees Pension Scheme) கீழ் வரும் ஓய்வூதிய பலன்களை பாதிக்கக்கூடும் என்று பல மூத்த ஊழியர்கள் கவலைப்படுகிறார்கள்.

ATM வழியாக PF பணம் எடுக்கும் புது வசதிக்கு பின்னால் சிக்கல்?

இதை தெளிவாக புரிந்துகொள்ள முதலில் இபிஎப் என்றால் என்ன? இபிஎஸ் என்றால் என்ன? என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இபிஎப் என்கிற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இபிஎஸ் என்கிற ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை இந்தியாவில் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு தளங்களாகும், இவை இரண்டும் இபிஎப்ஓ-வால் நிர்வகிக்கப்படுகின்றன. இருப்பினும், அரசாங்கம் இபிஎப் சேமிப்பு மற்றும் இபிஎஸ் ஓய்வூதிய பங்களிப்புகளை தனித்தனியாகவே கருதுகிறது.

ஏடிஎம் அடிப்படையிலான இபிஎப் பணம் எடுக்கும் வசதி ஓய்வூதியத்தை பாதிக்குமா? ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி, ஊழியர் மற்றும் எம்பிளாயர், வருங்கால வைப்பு நிதிக்கு (PF) செலுத்திய பங்களிப்புகள் உட்பட, இபிஎப் இருப்புக்கு மட்டுமே பொருந்தும். அப்போதும் கூட, உறுப்பினர்கள் இபிஎப் இருப்பில் 75% வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஓய்வூதியதாரர்கள் இந்த வசதி மூலம் தங்களின் இபிஎஸ் ஓய்வூதியத் தொகையை எடுக்க முடியாது.

இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகம் என்ன தெளிவுபடுத்தியது? இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஓர் அரசாங்க அறிவிப்பில், "முன்மொழியப்பட்ட மாற்றங்களால் 58 வயதில் ஓய்வூதிய உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு உறுப்பினர், 10 வருட சேவையை நிறைவு செய்வதற்கு முன்பே, இந்த 10 ஆண்டுகளில் எந்த நேரத்திலும் ஓய்வூதியக் கணக்கில் உள்ள தொகையை எடுக்கலாம். இருப்பினும், ஓய்வுபெறும் போது ஓய்வூதியம் பெற தகுதிபெற, ஒரு உறுப்பினர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இபிஎஸ் உறுப்பினர் சேவையை நிறைவு செய்திருக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, 50 வயதான ஒரு பணியாளர் தனது இபிஎப் இருப்பில் கணிசமான பகுதியை எடுத்தால், அது அவரது இபிஎஎஸ் சேவை பதிவை மீட்டமைக்காது. அவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதியான சேவையை நிறைவு செய்யும் வரை, அவர்கள் ஓய்வூதிய பலன்களுக்கு தகுதியுடையவர்களாகவே இருப்பார்கள்.

இபிஎப்ஓ 3.0 என்றால் என்ன? இபிஎப்ஓ 3.0 என்பது இபிஎப்ஓ-வின் ஒரு முக்கிய டிஜிட்டல் மேம்பாட்டு முயற்சியாகும். இது சந்தாதாரர்கள் தங்கள் பிஎப் பணத்தை காகிதமில்லா முறையில் உடனடியாக எடுக்கவோ அல்லது மாற்றவோ உதவும். இந்த புதிய அமைப்பு, சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி சேமிப்பை யுபிஐ மற்றும் யுபிஐ வசதி கொண்ட ஏடிஎம்-கள் மூலம் நேரடியாக அணுகவும், மாற்றவும் அனுமதிப்பதன் மூலம், செயலாக்க தாமதங்களை நீக்கும்.

இபிஎப்ஓ 3.0 அறிமுகத் தேதி: தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இம்மாத தொடக்கத்தில், அரசாங்கம் இந்த வசதியின் சோதனையை முடித்துவிட்டதாகவும், இந்த சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். இருப்பினும், அவர் சரியான தேதியை வழங்கவில்லை. "உறுப்பினர்கள் யுபிஐ கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி இபிஎப் (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி) பணத்தை எடுக்கக்கூடிய வசதியின் சோதனையை நாங்கள் முடித்துவிட்டோம். எடுக்கப்பட்ட தொகை நேரடியாக உறுப்பினரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்," என்று மாண்டவியா கூறினார்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டில் அரசாங்கம் 1.29 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களை ஊதிய பட்டியலில் சேர்த்துள்ளது. இதே காலகட்டத்தில், வேலையின்மை விகிதம் 2017-18 இல் 6% ஆக இருந்ததிலிருந்து 2023-24 இல் 3.2% ஆக குறைந்தும் உள்ளது. இபிஎப்ஓ ​​தற்போது ஏறத்தாழ ரூ.28 லட்சம் கோடி நிதியை நிர்வகித்து வருகிறது. அதன் வலுவான அமைப்பு, பாதுகாப்பு மற்றும் பல சமயங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்ட அதிக வருமானம் ஆகியவற்றின் காரணமாக கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இதை நம்புகின்றனர்.


Article Corrections

Title and Article Image Changed
Best Mobiles in India

English summary
EPFO 3 0 Withdrawing 75 Percentage of PF money through ATM Will Affect your pension or Not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X