பகீர்.. ChatGPT-ஆல் இப்போது உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை பார்க்க முடியும்.. OpenAI கொண்டு வந்த விபரீத அப்டேட்!
ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது சாட்ஜிபிடி-க்குள் (ChatGPT) ஒரு புதிய தனிநபர் நிதி அம்சத்தை (Personal finance feature) அறிமுகப்படுத்தி உள்ளது. சுருக்கமாக சொன்னால், இப்போது உங்கள் வங்கி கணக்குகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் முதலீட்டு கணக்குகளை நேரடியாக சாட்ஜிபிடி உடன் இணைக்கலாம். ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது உங்கள் பணத்தை புரிந்துகொள்ள உதவும்.
தற்போதைக்கு, இது அமெரிக்காவில் மாதம் $200 செலுத்தும் சாட்ஜிபிடி ப்ரோ பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. பிளஸ் பயனர்களுக்கு இது பின்னர் கிடைக்கும் என்றும், மேலும் இது இறுதியில் அனைவருக்கும் அணுக கிடைக்கும் என்றும் ஓப்பன்ஏஐ நிறுவனம் கூறுகிறது.

இது எப்படி வேலை செய்கிறது, நீங்கள் உண்மையில் இதனிடம் என்ன கேட்கலாம்? நீங்கள் ஒரு வங்கி கணக்கை இணைத்தவுடன், சாட்ஜிபிடி உங்கள் பணம் எங்கே செல்கிறது என்பதை ஒரு டாஷ்போர்டில் காட்டுகிறது. செலவுகள், முதலீடுகள், செயலில் உள்ள சந்தாக்கள் மற்றும் வரவிருக்கும் பேமண்ட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் காட்டுகிறது.
இது பிளெயிட் (Plaid) வழியாக 12,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைகிறது, இதில் சேஸ் (Chase), ஸ்க்வாப் (Schwab), பைட்லிட்டி (Fidelity), ராபின்ஹூட் (Robinhood), அமெக்ஸ் (Amex) மற்றும் கேப்பிட்டல் ஒன் (Capital One) ஆகியவை அடங்கும். அங்கிருந்து, நீங்கள் வழக்கமாக தவிர்க்கும் வகையின் கீழ் வரும் கேள்விகளை இதனிடம் கேட்கலாம்.
உதாரணத்திற்கு நான் வழக்கத்தை விட அதிகமாக செலவு செய்கிறேனா, ஐந்து ஆண்டுகளில் என்னால் ஒரு வீடு வாங்க முடியுமா, நான் இன்னும் பணம் செலுத்தி மறந்துவிட்ட சந்தாக்கள் எவை? போன்ற கேள்விகளை கேட்கலாம். இயல்பாகவே, இந்த உரையாடல்கள் ஓப்பன் ஏஐ-யின் புதிய பகுத்தறிவு மாடல் ஆன ஜிபிடி-5.5 திங்கிங்கில் (GPT-5.5 Thinking) இயங்குகின்றன.
ப்ரோ பயனர்களுக்கு ஜிபிடி-5.5 ப்ரோவும் கிடைக்கிறது, இது மிகவும் சிக்கலான நிதி சார்ந்த கேள்விகளை சிறப்பாகக் கையாளும் என்று ஓப்பன் ஏஐ கூறுகிறது. இதை தொடங்குவதற்கு, சைட் பாரில் இருந்து ஃபைனான்சஸ்-ஐத் திறக்கவும், அல்லது எந்தவொரு உரையாடலிலும் "@Finances, connect my accounts" என டைப் செய்யவும் என்றும் ஓப்பன்ஏஐ கூறுகிறது.
சாட்ஜிபிடி ஆல் உங்கள் அக்கவுண்ட்களில் என்ன பார்க்க முடியும், என்ன பார்க்க முடியாது, மற்றும் சாட்ஜிபிடி உடனான இணைப்பை துண்டிப்பது எப்படி? சாட்ஜிபிடி ஆனது உங்கள் பேலன்ஸ், பரிவர்த்தனைகள், முதலீடுகள் மற்றும் பொறுப்புகளை ரீட் செய்ய முடியும். ஆனால் இதனால் பணத்தை மாற்றவோ அல்லது உங்கள் முழுமையான அக்கவுண்ட் நம்பர்களை பார்க்கவோ முடியாது.
ஒருவேளை நீங்கள் உங்கள் மனதை மாற்றிக்கொண்டால், நீங்கள் சாட்ஜிபிடி அணுகும் எந்த கணக்கையும் துண்டிக்கலாம், மேலும் ஒத்திசைக்கப்பட்ட தரவு (synced data) 30 நாட்களுக்குள் அழிக்கப்படும். நீங்கள் அதன் "நிதி நினைவுகளையும்" (financial memories) நீக்கலாம். அதாவது, ஒரு வீட்டு கடன் அல்லது உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணம் போன்ற, சாட்ஜிபிடி சேமித்து வைத்திருக்கும் விவரங்களை நீக்கலாம், இதனால் எதிர்கால பதில்கள் மிகவும் தனிப்பட்டதாக உணரப்படும். தற்காலிக உரையாடல்கள் உங்கள் அக்கவுண்ட்களை சிறிதும் பாதிக்காது.
ஓப்பன்ஏஐ நிறுவனம், தனிநபர் நிதி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஹிரோவை வாங்கிய ஒரு மாதத்திற்கு பிறகு இந்த அம்சம் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.ஹிரோ குழு இதை உருவாக்க உதவி உள்ளது. இருப்பினும் அதன் பங்களிப்பு எவ்வளவு என்பதை ஓப்பன்ஏஐ நிறுவனம் கூறவில்லை. அடுத்து இன்ட்யூட் ஆதரவு (Intuit support) வரவிருக்கிறது, இது பங்கு விற்பனை மீதான வரி மதிப்பீடுகளையும், கடன் அட்டை ஒப்புதல் வாய்ப்புகளையும் சாட்ஜிபிடி-க்குள் கொண்டு வர உள்ளது.


Click it and Unblock the Notifications