Home
News

பிஎஸ்என்எல் சுதந்திர தின சலுகை.. ரூ.1 ப்ரீபெய்ட் திட்டம்.. தினமும் 1ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ரூ.1 விலையில் ப்ரீபெய்ட் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது பிஎஸ்என்எல் சிம் வாங்கும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.1 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அதிக சலுகைகள் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே உள்ள பழைய வாடிக்கையாளர்கள் யாரும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் பலனை பெற முடியாது. இப்போது ரூ.1 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் சுதந்திர தின சலுகை.. ரூ.1 ப்ரீபெய்ட் திட்டம்..

பிஎஸ்என்எல் ரூ.1 திட்டம் (BSNL Rs1 Plan) ஆனது மொத்தம் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. ஆகவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 24ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் முதல் முறை ப்ரீபெய்ட் சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.1 திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் சில காலம் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி நன்மையை வழங்கி உள்ளது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் 47 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 412 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட கூடுதல் வேலிடிட்டி சலுகை ஆனது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் சுதந்திர தின சலுகை.. ரூ.1 ப்ரீபெய்ட் திட்டம்..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு தான் பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகள் மற்றும் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பிஸ்என்எல் நிறுவனம் நாட்டில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை நாட்டில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credits: abplive

Best Mobiles in India

English summary
BSNL Brings Back Its Rs 1 Offer: Here’s What You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X