விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4 ஜிசேவையை துவங்குகின்றது.!


இந்திய தொலைத் தொடர்பில் அரசு நிறுவனமான பிஎஸ்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை தொடங்க இருக்கின்றது. முன்னதாக முதல் தலைமுறைக்கான பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைபேசி சேவை வழங்கி வருகின்றது.

இதன் பிறகு 2ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் துவங்கியது. அதற்கு அடுத்தபடியாக 3 ஜி சேவையும் வழங்கி வருகின்றது. தற்போது வரை பிஎஸ்என்எல் நிறுவனம் 1ஜி, 2ஜி, 3ஜி சேவைகளை சிறப்பாக வழங்கி வருகின்றது.

தற்போது இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் 4 ஜி சேவையை வழங்கி வருகின்றது. வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கவும் விரைவான சேவையை பொது மக்களுக்கு வழங்கவும் பிஎஸ்எல் நிறுவனம் தற்சயம் 4 ஜி சேவையை விரைவில் நிறுவ இருக்கின்றது.

2100 மெகா ஹெர்ட்ஸ் 4ஜி சேவை:

தனியார் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பிஎஸ்என்எல் நிறுவனம் 2100 ஹெர்ட்ஸ்-ல் 4 ஜி சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் 2017ம் ஆண்டுக்கான விரிவான திட்ட அறிக்கையும் சமர்ப்பித்துள்ளது.

ரூ.13,885 கோடி மதிப்பு:

மேலும் 4ஜி அலைவரிசையின் மதிப்பு ரூ.13885 கோடி மதிப்பு ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.6652 கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பியுள்ளது. 4 ஜி சேவைகளுக்காக ஆரம்பத்தில் 10 ஆண்டுக்கான வருவாயை செலவை பிஎஸ்என்எல் நிறுவனம் ஆப்ரேட்டர்களுக்காக சந்திக்க விரும்பியுள்ளது.

நீண்ட கால வளர்ச்சி:

இருப்பினும் தொலைத்தொடர் ஆணையம் பிரிந்துரையின் பின்னர் ஸ்பெக்ரம் செலுத்துவற்கு 16 ஆண்டுகளுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் விரைவில் நீண்ட கால பரிணாம வளர்ச்சி (எல்டிஇ) சேவைகளை தொடங்க முடியும்.

திட்டம் ஏற்பு:

இந்நிலையில் தொலைத்தொடர்பு துறை எங்கள் திட்டத்தை ஏற்றுள்ளது மற்றும் 2100 மெகா ஹெர்ட்ஸ் 4ஜி சேவைகளை இயக்க உள்ளது என பிஎஸ்என்எல் தலைவர் அனுபிரம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

21 வட்டங்களில் 4 ஜி சேவை:

பிஎஸ்என்எல் நிறுவனம் 21 வட்டங்களில் 2100 மெகா ஹெர்ட்ஸ் ல் 4ஜி சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தானில் 800 மெகா ஹெர்ட்ஸ் அலைமானிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவிக்கையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் பலைட் திட்டத்தின் ஒரு பகுதியாக 4ஜி சேவைகளை ஏற்கனவே நிறுவனம் துவங்கியுள்ளது என்றார்.


Read More About: smartphone technology news india
Have a great day!
Read more...

English Summary

BSNL 4G services is going to launch soon : Read more about this in Tamil GizBot