அதிர்ச்சி : குழந்தைகளை 'தாக்கும்' நோமோஃபோபியா..??
சிறிது நேரம் கையில் ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும் உடனே மன ரீதியாக உடைந்து விடுபவர் அல்லது கோபமடைபவரா நீங்கள், அப்படியானால் உங்களுக்கு நோமோஃபோபியா அல்லது மொபைல் போன் ஃபோபியா எனும் நோய் இருப்பதாக நாங்கள் சொல்லவில்லை, மருத்துவர்களே கூறுகின்றனர்..!
ரத்த நிலா : ஆரம்பமாகிறது உலகின் அழிவு..!
இது குறித்து மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..!

செல்பீ ஸ்டிக்
செல்பீ ஸ்டிக் மற்றும் எமோஜிகள் அறிமுகமான ஆசிய கண்டத்தில் ஸ்மார்ட்போன் அடிமை தனம் அதிவேகமாக பரவி வருின்றது.

இளைஞர்
இவற்றில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருப்பதாகவும் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தென் கொரியா
சமீபத்தில் தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 1000 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

வயது
ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் சுமார் 72 சதவீதம் பேர் 11 மற்றும் 12 வயதுக்குள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

நேரம்
இவற்றில் அவர்கள் சுமார் 5.4 மணி நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

அடிமை
அவற்றில் 25 சதவீதம் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமைகளாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

உணவு
ஆசியாவில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி தங்களது உணவுகளை ஆவணப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

சிறுவர்
ஆசியா கண்டத்தில் பெருமளவிலான சிறுவர்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பதற்றம்
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தங்களிடம் போன் இல்லை என்பதை அறிந்தவுடன் பதற்றமடைவதாகவும் இதுவும் ஸ்மார்ட்போன் அடிமை தனத்தை உறுதிபடுத்தும் செயல் தான் என கூறப்பட்டுள்ளது.

பழக்கம்
இன்றைய பெற்றோர்கள் குழந்தைகள் கையில் மொபைல்களை வழங்கி அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்பதை கற்று கொடுக்கின்றனர்.

அறிமுகம்
இதன் காரணமாக சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மொபைல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

கட்டுப்பாடு
சிறு வயதிலேயே மொபைல் கிடைப்பதால் நாளடைவில் மொபைல் பழக்கம் போதையாக மாறுகின்றது என சிங்கப்பூரில் இருகும் டச் சைபர் வெல்னஸ் சென்டர் மேலாளர் சாங் ஈ-ஜே தெரிவித்துள்ளார்.

அறிகுறி
அடுத்து வரும் ஸ்லைடர்களில் ஸ்மார்ட்போன் அடிமை தனத்திற்கான அறிகுறிகளை பாருங்கள்..

சரி பார்த்தல்
அடிக்கடி போனினை எடுத்து சரி பார்க்கும் பழக்கம் அதிகரிக்கும்.

எதிர்பார்ப்பு
எந்நேரமும் கையில் போன் வைத்திருப்பதால் திடீரென கையில் போன் இல்லை என்றவுடன் பதற்றமடைவது.

சமூகம்
எந்நேரமும் போன் பயன்படுத்துவதால் மற்ற விஷயங்களில் ஈடுபாடு குறையும்.

படிப்பு
அதிகளவிலான மொபைல் பயன்பாடு படிப்பில் ஆர்வத்தை குறைப்பதோடு மதிப்பென் குறைவுக்கும் காரணமாக இருக்கும்.

குறுந்தகவல்
குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல்.

தூக்கம்
நடு இரவில் விழித்து கொண்டு போனினை சரி பார்த்தல், என முந்தைய ஸ்லைடர்களில் குறிப்பிட்டவை நீங்கள் மொபைலுக்கு அடிமையாகின்றீர்கள் என்பதை உறுதி செய்யும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முகநூல்
இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications
