Home
News

ப்ளாக்பெரி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உறுதி..!!

பல மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டும் வரும் புதிய ப்ளாக்பெரி கருவி குறித்த செய்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது அந்நிறுவனத்தின் சமீபத்திய நிக்ழ்வு, இந்தாண்டின் இரண்டாவது காலாண்டு குறித்து அறிக்கையை வெளியிடும் போது அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜான் சென் அந்நிறுவனத்தின் புதிய கருவி குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

'ஆண்ட்ராய்டு' பத்திரமா பாத்துகோங்க..!!

ப்ளாக்பெரி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உறுதி..!!

அதன் படி புதிய ப்ளாக்பெரி ஸ்மார்ட்போன் ப்ரிவ் என்றும் இந்த கருவி கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் இறுதியில் இந்த கருவி வெளியிடப்பட்டு ஆன்லைன் மற்றும் வர்த்தகர்களிடம் விற்பனைக்கு கிடைக்கும் என்பதோடு இந்த கருவி குறித்த மேலும் பல தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமை வேகத்தில் ஆண்ட்ராய்டு, முயல் வேகத்திற்கு மாற்ற..?!

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் புதிய ப்ளாக்பெரி கருவி வெனிஸ் என கூறப்பட்டு வந்தது. மேலும் இந்த கருவி 5.4 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே, ஹெக்ஸாகோர் ஸ்னாப்டிராகன் 808 எஸ்ஓசி, 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டது.

ப்ளாக்பெரி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உறுதி..!!

கேமராவை பொருத்த வரை இந்த கருவியில் 5 எம்பி முன்பக்க கேமராவும் 18 எம்பி ப்ரைமரி கேமராவும் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் ஸ்லைடு க்வர்டி கீபோர்டு உள்ளிட்ட பல புதிய சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Android powered BlackBerry Priv confirmed to launch in 2015. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X