ஏலியன்ஸ் தலைமறைவாக இருப்பது உண்மை., அவர்கள் வாழும் இடம் இதுதான்: வெளியான அதிர்ச்சி தகவல்!
ஏலியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்ற மர்மம் நீண்டகாலமாகவே நீடித்து வருகிறது. ஏலியன்ஸ் இருப்பது உண்மை அவர்களுக்கு மனிதகுலம் குறித்து தெரியாமல் இருப்பது நல்லது என்ற விவாதங்களும் ஏலியன்ஸ் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற விவாதங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர்
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் தற்போது பேராசிரியராக பணியாற்றிவருமான ஹைம் எஷெட் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். 87 வயாதான ஹைம் எஷெட் இஸ்ரேலின் எடியட் அஹரோனோட் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி குறித்து பார்க்கலாம்.

வேற்றுகிரக வாசிகளின் வாழ்க்கை குறித்த தகவல்
ஹைம் எஷெட் வேற்றுகிரக வாசிகளின் வாழ்க்கை குறித்து விரிவாக பேசினார். அமெரிக்க அரசாங்கத்திற்கும் வேற்றுகிரக வாசிகளின் கேலடிக் கூட்டமைப்பு இடையிலான ஒரு ஒப்பந்தம் குறித்து விவரித்தார். வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மை. அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அதுகுறித்து தெரியும் என குறிப்பிட்டார்.

வேற்றுகிரக வாசிகளுடன் தொடர்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நீண்ட காலமாக வேற்றுகிரக வாசிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக எஷெட் தெரிவித்தார். வேற்றுகிரக வாசிகள் நீண்டகாலமாக அரசாங்கங்களுடன் ரகசியமாக வேலை செய்கிறார்கள் எனவும் அதற்காக அவர்களின் நேரத்தை ஒதுக்குகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

இஸ்ரேலிய பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி
இஸ்ரேலிய பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆதாரங்களை வெளியிட அமெரிக்கா முயற்சித்தாலும் மனிதர்கள் அதற்கு தயாராக இல்லை எனவும் தகவலை ரகசியமாக வைத்திருக்கும்படி வேற்றுகிரகவாசிகள் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பூமியை ஆக்கிரமிக்க முயற்சிக்கவில்லை
பூமியை ஆக்கிரமிக்க வேற்றுகிரக வாசிகள் முயற்சிக்கவில்லை எனவும் அதற்குமாறாக பிரபஞ்ச விதிகளை புரிந்து கொள்வதற்கான தேடலில் மனிதர்களுக்கு உதவ முயற்சிக்கிறார்கள் என தெரிவித்தார். அமெரிக்க அரசாங்கத்துக்கும் வேற்றுகிரக வாசிகளுக்கும் இடையே ஒரு உடன்பாடு உள்ளதாக எஷெட் குறிப்பிட்டார்.

செவ்வாய் கிரகத்தில் வாழும் ஏலியன்ஸ்
எஷெட் மூன்று தசாப்தங்களாக இஸ்ரேல் விண்வெளி பாதுகாப்பு திட்டத்திற்கு தலைமை தாங்கினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எஷெட் மற்றொரு நாளிதழான ஜெருசலேம் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில், செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகளுடன் இணைந்து அமெரிக்கா நிலத்தடி தளம் ஒன்று அமைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

கேலடிக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம்
வேற்றுகிரக வாசிகள் நீண்டகாலமாக நம்மோடு இருக்கின்றன எனவும் அவை கேலடிக் கூட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்க அரசோடு இணைந்து செயல்படுகின்றன எனவும் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் இருப்பை வெளிப்படுத்த தயாரானார் ஆனால் இது தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் எனவும் மனிதகுலம் மேம்பட்டு விண்வெளி, விண்கலம் என்பதை இயல்பாக புரிந்துக் கொள்ளும் கட்டத்தை எட்டும்வரை காத்திருக்கும்படி வேற்றுகிரக வாசிகள் கேலடிக் கூட்டமைப்பின் கீழ் வலியுறுத்தப்பட்டதால் இதுகுறித்து அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

டிரம்பிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை
ஹைம் எஷெட் அளித்த இந்த பேட்டி ஆதாரமற்ற தகவல் என கூறப்பட்டாலும் அமெரிக்க தரப்பில் இருந்தும் டிரம்பிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த பேட்டி வெளியானதில் இருந்து ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
source: ndtv.com


Click it and Unblock the Notifications








