முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு


ப்ரீபெய்ட் டெலிகாம் தொழில் மற்றும் டி.டி.எச் தொழில் போன்றே பிராட்பேண்ட் தொழிற்துறையும் காலப்போக்கில் பரவலான போட்டித்தன்மை வாய்ந்த பாதையில் சென்றுவிட்டது. சந்தையில் உள்ள பல்வேறு பிராட்பேண்ட் நிறுவனங்களும் அதிவேக சலுகைகளை போட்டி விலையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

Advertisement

சலுகைகள் வழங்குவதில் போட்டி

பிராட்பேண்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்கும், அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுவருவதற்கு பல்வேறு சலுகைகளை வழங்கி கொண்டே இருக்கின்றனர். இந்த துறையில் இப்போது ஏராளமான பிராட்பேண்ட் சேவை வழங்குநர்கள் உள்ளனர். கேபிள் டிவி சேவைகளும் இப்போது பிராட்பேண்ட் நிறுவனங்களாக செயல்படுகின்றன.

Advertisement
மிகப் பெரிய பிராட்பேண்ட் சேவை வழங்குநராக பி.எஸ்.என்.எல்

இந்தியாவில் மிகப் பெரிய பிராட்பேண்ட் சேவை வழங்குநராக பி.எஸ்.என்.எல் உள்ளது, அதன்பிறகு, பாரதி ஏர்டெல்லின் பிராட்பேண்ட் சேவை உள்ளது. இது இப்போது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் என்று அழைக்கப்படுகிறது. இப்போது, ​​முன்னதகாவே ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவை நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டேதான் இருக்கின்றன.

2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்

புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஏர்டெல்

ஏர்டெல் பிராட்பேண்ட் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில், இந்த புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாரதி ஏர்டெல் தனது இணையதளத்தில் பிராட்பேண்ட் பிரிவில் அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையைப் பற்றி கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது தற்போது சென்னையில் உள்ள ஏர்டெல் பிராட்பேண்டின் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ .1000 தள்ளுபடி

புதிய ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பைப் பெறும் சந்தாதாரர்களுக்கு ரூ .1000 தள்ளுபடி கிடைக்கும், அல்லது முதல் மாத வாடகை இலவசமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ .799 பிராட்பேண்ட் திட்டம்

பாரதி ஏர்டெல்லிலிருந்து ரூ .799 பிராட்பேண்ட் திட்டத்தைத் தேர்வுசெய்தால், அவர்கள் முதல் மாத வாடகையை செலுத்தத் தேவையில்லை என அறிவித்துள்ளனர். ரூ .799 பிராட்பேண்ட் திட்டம் 100 எம்.பி.பி.எஸ் வேகம், 150 ஜிபி தரவு வரம்பு, வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி அழைப்புகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தாவுடன் வருகிறது.

ரூ .999 பிராட்பேண்ட் திட்டம்

ரூ .999 பிராட்பேண்ட் திட்டம், 200 எம்.பி.பி.எஸ் வேகம் மற்றும் 300 ஜிபி இணையத்துடன் வருகிறது. வரம்பற்ற அழைப்புகள் உள்ளது. இதில் சந்தாதாரர்கள் அமேசான் பிரைம் சந்தா, நெட்ஃபிக்ஸ் மூன்று மாதங்கள், ZEE5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா ஆகியவை முழு ஆண்டு இலவசமாக வழங்குப்படுகிறது.

டாப் 10 2019: பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்

300 எம்.பி.பி.எஸ் மற்றும் 1 ஜி.பி.பி.எஸ் வேகம்

இதில் பிரீமியம் மற்றும் விஐபி திட்டங்களும் உள்ளன. இது 300 எம்.பி.பி.எஸ் மற்றும் 1 ஜி.பி.பி.எஸ் வரை வேகத்தை சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது. பிரீமியம் திட்டம் 500 ஜிபி இணையத்தை வழங்கும் அதே வேளையில், விஐபி திட்டம் வரம்பற்ற இணையத்தை சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது. பிரீமியம் திட்டம் பயனர்களுக்கு ரூ .1,499 மற்றும் விஐபி திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ .3,999 ஆகும். அனைத்து திட்டங்களின் டேட்டாக்கள் முடிவடையும் பட்சத்தில் கூடுதலாக ரூ.299 செலுத்தி புதுப்பிக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Source: telecomtalk.info

Best Mobiles in India

English Summary

Airtel: New Broadband Customers Can Avail a Rs 1,000 Less connections