Home
News

ஏர்டெல் ரூ.48 திட்டம் அறிமுகம்.. எத்தனை நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்?

ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.48 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மலிவு விலை திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.48 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 48 prepaid plan) ஆனது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். குறிப்பாக இதில் டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஏர்டெல் ரூ.48 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.48 திட்டம் அறிமுகம்.. என்னென்ன நன்மைகள்?

குறிப்பாக ரூ.48 திட்டம் ஆனது டேட்டா வவுச்சர் என்பதால் எந்த வேலிடிட்டியும் வழங்காது. ஆகவே இதைப் பயன்படுத்த, உங்களுக்கு ஒரு செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டம் தேவைப்படும். மேலும் இந்த ஜியோஹாட்ஸ்டார் OTT பலன், ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஐபிஎல் 2026 கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க விரும்பும் பயனர்களுக்கு இந்த புதிய ரூ.48 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனம் வைத்துள்ள ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

ஏர்டெல் ரூ.48 திட்டம் அறிமுகம்.. என்னென்ன நன்மைகள்?

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

அதிக டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டி, ஓடிடி சந்தா, Adobe பிரீமியம் உள்ளிட்ட பல நன்மைகள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel launches Rs.48 data pack plan: check validity and benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X