ரூ.4999 பட்டைய கிளப்பும் சியோமி ஸ்மார்ட்போன்.!

இந்நிலையில் மிகவும் குறைந்த விலையில் சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. 100 ஜிபி டேட்டா மற்றும் 2200 கேஷ்பேக் உடன் சியோமி நிறுவனத்தின்


சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

Advertisement

இதுகுறைந்த விலையில் இருந்தாலும், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் போன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது. மற்ற நிறுவனங்களையும் சந்தையில் பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடத்தில் சியோமி நிறுவனம் இருக்கின்றது.

Advertisement

இந்நிலையில் மிகவும் குறைந்த விலையில் சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. 100 ஜிபி டேட்டா மற்றும் 2200 கேஷ்பேக் உடன் சியோமி நிறுவனத்தின் ரெட்டிமி ஸ்மார்ட்போன் களமிறங்குகின்றது.

ரெட்மி கோ:

சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது மாடலான ரெட்மி கோவை அறிமுகம் செய்துள்ளது. இது சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனாகும்.

5 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன்:

இதன் திரை 5 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர், 1ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் 5 எம்பி செல்பி கேமரா, 4ஜிபி எல்டிஇ, பிரத்யேக சிம் கார்டு ஸ்லாட்கள் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி.

425 புராசஸர்:

5 இன்ச் திரையில் 1280 x720 பிக்சல் ஹெச்டி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னபா;டிராகன் 425 பிராசஸர், அட்ரினோ 308 ஜிபியு, 8ஜிபி மெமரி.

ஆண்ட்ராய்டு 8.0 :

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியே கோ எடிஷன், டூயல் சிம் ஸ்லாட், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், எப் 2.0 1.12 μm பிக்சல், 3.5எம்.எம் ஆடியோ, ஜாக், எப்எம் ரேடியோ. டூயல் மைக் போன்.

3000 எம்ஏஹெச் பேட்டரி:

4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், 3000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

ரூ.4999 கிடைக்கும்:

சியோமி ரெட்மிகோ ஸ்மார்ட்போன் பிளாக், புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கின்றது. இந்தியாவில் ரெட்மிகோ ஸ்மார்ட்போன் ரூ.4,499 என் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 22ம் தேதி முதல் பிளிப்கார்ட், எம்ஐ வலைதளம் மற்றும் எம்ஐ ஸ்டோர்களில் துவங்குகிறது.

அசத்தும் ஜியோ சலுகை:

புதிய ரெட்மி கோ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்ளுக்கு ரூ.2200 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி டேட்ட வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English Summary

Xiaomi Redmi Go Android Go Edition smartphone launched : Read more about this in Tamil GizBot