சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இக்கருவி 6.18-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


சியோமி நிறுவனம் தனது போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 வரை விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி விலைகுறைந்த இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

குறிப்பாக மார்ச் 25-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை மட்டுமே சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போனை விலைகுறைப்பில் வாங்க முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதனுடன் கேஷ்பேக் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

25-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போகோ எப்1 மாடலை ரூ.19,999-விலையிலும்,

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போகோ எப்1 மாடலை ரூ.27,999-விலையிலும் வாங்க முடியும்.

மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

இக்கருவி 6.18-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

பின்G 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி போகோ எப்1 சாதனம் வெளிவரும்

Best Mobiles in India

English Summary

Xiaomi Poco F1 price to be slashed by Rs 2,000 for a limited time: Read more about this in Tamil GizBot