Home
Mobile

OPPO, VIVO-வை தூக்கி சொருகிய புது Xiaomi போன்.. ஒரே போனில் இரண்டு 200MP கேமராக்கள்.. எந்த மாடல்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship Smartphone) வழியாக.. மொபில் போட்டோகிராஃபி பிரிவில் ஒரு பெரிய பாய்ச்சலை (ஒரு பெரிய அப்கிரேட்டை) நிகழ்த்த உள்ளது போல் தெரிகிறது. அப்படி என்ன செய்கிறது? எந்த ஸ்மார்ட்போனில்? இதோ விவரங்கள்:

ஷாவ்மீ நிறுவனம் அதன் சியோமி 18 சீரிஸிற்காக (Xiaomi 18 Series) பெரிய அளவிலான கேமரா மேம்பாடுகளை தயாரித்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்த ஒரு புதிய லீக் ஆனது - சியோமி 18 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 18 Pro Max) ஸ்மார்ட்போனில் டூயல் 200 மெகாபிக்சல் கேமரா அமைப்பு (Dual 200 Megapixel Camera Setup) இடம்பெறும் என்று சுட்டிக்காட்டுகின்றன.

தூக்கி சொருகிய புது Xiaomi போன்.. ஒரே போனில் இரண்டு 200MP கேமராக்கள்!

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள விவரங்ககளின்படி, சியோமி 18 ப்ரோ மேக்ஸில் 22என்எம்செயல்முறையில் உருவாக்கப்பட்ட 1/1.28-இன்ச் சென்சார் கொண்ட புதிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறலாம். இந்த செட்டப் உயர்-தெளிவுத்திறன் படங்களை வழங்கும் அதே வேளையில், பவர் யூஸேஜை குறைக்கவும் (Reduce power use ) குறைக்கவும், வெப்பத்தை மிகவும் திறம்பட நிர்வகிக்கவும் உதவக்கூடும்.

மேலும் இது நெக்ஸ்ட் ஜெனரேஷன் LOFIC HDR 3.0, அதிக பிரேம் கெயின் மற்றும் மிக அதிக டைனமிக் ரேஞ்ச் ஆகியவற்றை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. சியோமி 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் கோட்டிங்குடன் கூடிய ஜிபி கிளாஸ்-பிளாஸ்டிக் லென்ஸை பயன்படுத்தக்கூடும் என்றும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறியுள்ளார். டெலிஃபோட்டோ கேமரா மேக்ரோ ஷாட்களை ஆதரிக்கக்கூடும் மற்றும் இது பெரிய அபெர்ச்சருடன் வரலாம்.

OPINION: ஹை ரெசல்யூஷன் சென்சார்கள் மற்றும் மேம்பட்ட இமேஜிங் அம்சங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், ஷாவ்மீ நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் "புகைப்படக்கலையில்" வலு சேர்க்க விரும்புவதை வெளிப்படையாகவே பிரதிபலிக்கிறது. இதில் போட்டி மனப்பான்மையும் உள்ளது. விவோ போன்ற பிராண்டுகள் ஏற்கனவே விவோ எக்ஸ்300 அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்களில் டூயல் 200 மெகாபிக்சல் கேமராக்களை பயன்படுத்துகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

அறியாதோர்களுக்கு - சீனாவில் விவோ நிறுவனத்தின் எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டூயல் 200 மெகாபிக்சல் கேமராக்களுடன் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸெய்ஸ்-ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் OIS ஆதரவு கொண்ட 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் OIS, 3.7x வரை ஆப்டிகல் ஜூம் மற்றும் 105x வரை டிஜிட்டல் ஜூம் கொண்ட 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. கூடவே 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸும் உள்ளது.

ஆப்பிள், ஒப்போ என நீண்டுகொண்டே போகும் பட்டியல்: ஷாவ்மீ, விவோ நிறுவனநாள் இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஆப்பிள் (Apple) நிறுவனமும் 200 மெகாபிக்சல் கேமராவை சோதித்து வருவதாகக் கூறப்படுகிறது, இது வரவிருக்கும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ராவிலும் (Oppo Find X9 Ultra) பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அது சற்று பெரிய 1/1.12-இன்ச் சென்சாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பெரிய சென்சாரால் அதிக ஒளியை படம்பிடிக்க முடியும். இது நுணுக்கமான விவரங்கள், குறைந்த ஒளி செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த படத்தரத்தை மேம்படுத்தும்.

ஷாவ்மீ 18 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? சியோமி 18 மற்றும் சியோமி 18 ப்ரோ, சியோமி 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய சியோமி 18 சீரிஸ் ஆனது - ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சீரிஸ் சிப்செட்களுடன் இந்த ஆண்டு (2026) செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 18 Pro Max To Pack Dual 200MP Camera with reduce power usage heat managing report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X