மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் விவோ y9s.!


விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ y9s என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா ஆதரவுகளுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப்பார்ப்போம்.

டிஸ்பிளே அம்சம்

விவோ y9s ஸ்மார்ட்போன் ஆனது 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்டிஸ்பிளே கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம்.

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஹீலியோ பி65எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. இதனுடன் கார்டெக்ஸ் எ55 வசதியும் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சாதனம்.

ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்

கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு சற்று வித்தியசமாக உள்ளது என்றே கூறலாம்இ அதன்படி விவோ எஸ்5 சாதனத்தில் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றில் உள்ளது.

சிறந்த தரத்தில் கலக்கும் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஆடியோ சிஸ்டம்.!

சேமிப்பு வசதி

விவோ y9s ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது என்றும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

விவோ y9s ஸ்மார்ட்போனில் 4200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Most Read Articles

Best Mobiles in India

Have a great day!
Read more...

English Summary

Vivo Y9s Spotted on Online: Design, Camera, Specs Details : Read more about this in Tamil GizBot